காலகட்டத்திற்கு ஏற்ப ரசனைமிகு படங்களைக் கொடுத்த உலகநாயகன்...! இது பெருமை அல்ல...நிஜம்...!

Kamal in Anbe sivam
உலகநாயகன் கமல் படம்னாலே இப்படித் தான்...முத்தக் காட்சி இருக்கும். அதனால் தான் தமிழ் சமுதாயம் கெட்டுப்போய்விட்டது என்று நிறைய பேர் சொல்வார்கள். ஆனால் எத்தனையோ நல்ல விஷயங்களும் இருக்கிறது என்பதை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் எதற்காக அந்தக் காட்சியை வைக்கிறார் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்படி பார்த்தால் அதில் உள்ள நியாயம் நமக்கு புரிய வரும். கதைக்குத் தேவைப்படாமல் அவர் எந்த ஒரு காட்சியையும் திணிக்க மாட்டார். அதற்கு நாம் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
தேவைப்படாமல் கமல் படத்தில் புகைக்கும் காட்சி இருக்காது. முக்கியமாக போஸ்டர்களில் பீடி, சிகரெட், சுருட்டு பிடிப்பது போல இருக்காது

Vazhve mayam
கதைக்கு தேவையில்லாமல் கமல் படங்களில் குடிக்கும் காட்சிகளோ, டாஸ்மாக் பார் போன்ற காட்சிகளோ இடம்பெறுவது இல்லை. ஒரு சில தவிர்க்க முடியாத படங்களில் அக்காட்சிகள் இருக்கும். அவை படத்தின் அடிப்படை தேவை என்பதால் தாலன் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக வாழ்வே மாயம், விருமாண்டி ஆகிய படங்களைச் சொல்லலாம்.
எவ்வளவு தான் பகுத்தறிவு பேசினாலும், கமலைப் பொறுத்தவரை அந்த படத்தில் அதுவொரு கதாபாத்திரம். அதற்கு என்ன குணாதிசியமோ, அதை தான் செய்வார்.
உதாரணம், ரங்கராஜ நம்பியாக வைணவம் பேசுவார், நல்லசிவமாக கம்யூனிசம் பேசுவார், உன்னால் முடியும் தம்பியில் வியாக்கியானம் பேசுவார். சில பகுத்தறிவு நடிகர்கள் சினிமாவிலும் கூட பக்திமானாக நடிக்க மாட்டார்கள்.
கமல் படங்களில் நடிகைகளுக்கு வந்தோம், போனோம், பாட்டுக்கு நடனம் ஆடினோம் என்று பாத்திர படைப்பு இருக்காது. அவர்களுக்கு என்று நடிக்க வாய்ப்பும் இருக்கும்.
உதாரணமாக தேவர் மகன் படத்தில் ரேவதி, விருமாண்டி படத்தில் அபிராமி, மூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி, நாயகன் படத்தில் சரண்யா, பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிம்ரன், வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் சினேகாஎன சொல்லிக்கொண்டே போகலாம்.
கமல் படங்களில் பெரும்பாலும் பெண்களை கீழ்த்தரமாக பேசுவதோ, அவர்களை பின்தொடர்ந்து விசில் அடித்து ஈவ் டீசிங் செய்து, காதல் செய்ய நிர்பந்திப்பது போன்ற காட்சிகளோ இருக்காது.

Virumandi
கமல் படங்களில் இருக்கும் நம்பகத்தன்மை இருக்கும். இதற்கு உதாரணமாக விருமாண்டியில் நாயக்கர்கள், தேவர்கள் வீடுகள், அவர்களது வட்டார மொழி போன்றவை தத்ரூபமாக அமைந்திருப்பதைக் காணலாம்.
மைக்கேல் மதன காம ராஜனில் வரும் காமேசுவரன் உடல்மொழி, உச்சரிப்பு, போன்றவை ரொம்ப அற்புதமாக இருக்கும். விஸ்வரூபம் படத்தில் வரும் இசுலாமிய தோற்றம் அருமையாக இருக்கும்.
கமல் படங்களில் இருக்கும் நேர்மை. இது தவறு, இது சரி என்று வெட்டு ஒன்று துண்டு ஒன்று என்று கதைப்போக்கில் சொல்வது ரொம்பவே இயல்பாக இருக்கும்.

Viswaroopam
அந்தந்த காலங்களுக்கு ஏற்ப படம் கொடுத்த நடிகர் யார் என்றால் அது கமலாகத் தான் இருக்கும். வேலை இல்லா திண்டாட்டம் உச்சத்தில் இருந்தபோது வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா போன்ற படங்கள் நிதி நிறுவனங்கள் மோசடி சமயத்தில் மகாநதி, தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது குருதிப்புனல், விஸ்வரூபம், இலங்கையில் போர் உச்சம் பெற ஆரம்பித்தபோது தெனாலி போன்ற படங்களைச் சொல்லலாம்.
கமல் படங்களில் எப்போதும் ஹீரோ துதி பாடும் வசனங்கள் இல்லாதது தனிச்சிறப்பு. வசூல் ராஜா பாடலை தவிர எந்த படத்திலும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவரை புகழ்வது இல்லை.
உதாரணம் - விருமாண்டியில் அவரது பாட்டி கேவலமாக அவரை ஜல்லிக்கட்டில் திட்டுவார், சிங்காரவேலனில் கவுண்டமணி கலாய்ப்பார், பம்மல் கே சம்பந்தம் படத்தில் சிம்ரன் 'உன்ன பாத்தா எனக்கு அந்த உணர்வே வரலைய்யா' என்பார்.
29 வயதில் 60 வயது முதியவர் வேடத்தில் நடித்த மெச்சூரிட்டி. நாயகன் படத்தைப் பார்த்தால் தெரியும். இத்தனைக்கும் படத்தில் சிறு வயது கமலை விட முதியவராக வரும் காட்சிகள் தான் மிக அதிகம்.

Delhi ganesh
கமல் படங்களில் தேவை இல்லாத குத்து பாடல்கள் இருக்காது. கமல் படங்களில் மட்டுமே சிறப்பாக நடிக்கும் சில நடிகர்கள் என்று சிலர் உண்டு. உதாரணமாக நாசர், டெல்லி கணேஷ், அபாஸ், ஜெயராம் ஆகியோரைச் சொல்லலாம்.
கமல் படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். அது என்ன ராசியோ தெரியாது, எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் சரி, பாடல்கள் அருமையாக அமைந்துவிடும்.
அதிலும் குறிப்பாக இளையராஜா எங்கிருந்து தான் இவருக்கு மட்டும் அப்படி பாடல்கள் கொடுப்பாரா தெரியாது. அவ்ளோ அருமையா இருக்கும்.