வெங்கட் பிரபுவை கிழித்து தொங்கவிடும் கமல் ரசிகர்கள்.... காரணம் தெரியுமா?

by ராம் சுதன் |
venkat prabhu
X

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இன்று அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதே நாளில் தான் உலக நாயகன் கமல்ஹாசனும் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பமாகி உள்ளது. பொதுவாக திரைபிரபலங்களின் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்து தெரிவிப்பது சாதாரணமான விஷயம் தான். அப்படி ஒரு ரசிகர் வாழ்த்து தெரிவிக்க போய் அது வம்பில் முடிந்துள்ளது.

kamalhassan

kamalhassan

அதன்படி ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவரது டிவிட்டர் பக்கத்தில், "தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமை கொண்ட சகலகலாவல்லவர் வெங்கட் பிரபு அவர்களுக்கு முன் கூட்டிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

tweet

இதனை கண்ட வெங்கட் பிரபு, "அவ்ளோ பில்ட் அப் பாத்த உடனே, தப்பா என்ன டேக் பண்ணிட்டீங்க-னு நெனச்சேன். அப்பறம்தான் உள்குத்து புரியுது" என கமெண்ட்டில் பதிலளித்துள்ளார். மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை தாக்குவது போல் இருக்கும் இந்த பதிவால் கடுப்பான கமல் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்து வருகிறார்கள்.

அதோடு விடாமல் #எச்சப்பய_வெங்கட் பிரபு என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் பெருமளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது டிவிட்டரில் இந்த ஹேஷ்டேக் தான் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. பிறந்தநாள் அதுவும் இப்படி ஒரு பிரச்சனை இவருக்கு தேவையா என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

Next Story