இந்த படத்தோட வேல்யூ தெரியுமாடா உனக்கு!.. அனிருத்தை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இசைப்புயல் தான் கெத்து!..
புதிய படங்களின் டீசர், க்ளிம்ஸ் எல்லாம் வந்தால் ஹைப் எகிறும் ஆனால், படத்தை பார்த்தால் இருந்த ஹைப் டோட்டலாக போய் விடும். ஆனால், அதற்கு தலை கீழாக இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ காட்சி அமைய காரணமே அனிருத் தான் என பலரும் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ல் வெளியான இந்தியன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருப்பார். அவர் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை இப்போது கேட்டாலும், கப்பலேறி போயாச்சு, டெலிபோன் மணி போல், பச்சைக்கிளிகள் தோளோடு என வேறலெவலில் இருக்கும்.
இதையும் படிங்க: அடுத்த ஆண்டு ஆண்டவர் ஆண்டு தான் போல.. இந்தியன் 2, இந்தியன் 3 எப்போ ரிலீஸ் தெரியுமா?
அதற்கு ஈடாக அனிருத் எப்படித்தான் இசையமைக்கப் போகிறார் என ரசிகர்கள் பயந்துக் கொண்டிருந்த நிலையில், அதற்கு ஏற்றவாறே இந்தியன் 2 அறிமுக வீடியோவில் அவர் இசையமைத்துள்ள இசையை பார்த்து மும்பை இந்தியன்ஸ் ஆந்தமா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
புதுவிதமாக 2கே கிட்ஸ்களுக்கான இசையை அனிருத் கொடுத்திருந்தாலும், இந்திய சினிமாவின் பெருமைமிகு படைப்பான இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காமல் போனது ரசிகர்களுக்கு பெரிய குறையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: கம்பேக் இந்தியன்!.. ஷங்கர் இயக்கத்தில் கமல் மிரட்டும் இந்தியன் 2 இன்ட்ரோ எப்படி இருக்கு?.. தேறுமா?..
இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த குறைகளை எல்லாம் ஷங்கர் சரி செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உலகநாயகனின் உழைப்பு வீணடிக்கப்பட்டால் ரசிகர்கள் ரொம்பவே கஷ்டப்படுவார்கள் என்றும் சந்திரமுகி 2 போல இந்தியன் 2 கிரிஞ்சாக வந்து விடக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.