‘விருமாண்டி’ படத்துல சொல்ல நினைச்சது! சொல்லாம போனது இதுல இருக்குயா – கமல் பார்த்து சொன்ன படம் எதுனு தெரியுமா?

Published on: November 25, 2023
viru
---Advertisement---

Actor kamal: சினிமாவை பொறுத்தவரைக்கும் எல்லாம் தெரிந்த நடிகர் என்றால் அது நிச்சயமாக கமல் என்று சொல்லலாம். தெரியாத துறை இருந்தாலும் அதை எப்படியாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உடையவராகவும் இருப்பவர்.

அதனாலேயே இன்னும் பல மேடைகளில் நான் கற்றுக் கொள்ள இருப்பது ஏராளமாக இருக்கிறது என்று கமல் அடிக்கடி கூறுவார். நடிப்பிற்கு இலக்கணம், சிவாஜிக்கு அடுத்தபடியாக கமலைத்தான் அனைவரும் பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சீரியல்கள்! ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம்

சமூக கருத்துக்களை அவ்வப்போது தன் படங்களில் காட்டி சர்ச்சையை கிளப்பியவராகவும் இருந்திருக்கிறார் கமல். அப்படி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய படமாக விருமாண்டி திரைப்படம் அமைந்தது. டைட்டிலிலேயே சர்ச்சையில் சிக்கியது.

முதலில் சண்டியர் என்றுதான் படத்தலைப்பாக இருந்தது. அதன் பிறகுதான் விருமாண்டி என மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் அமீர் கமல் பற்றி ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறினார். அதாவது கார்த்தியை வைத்து அமீர் இயக்கிய படம் பருத்திவீரன்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் யார் கூப்பிட்டும் நடிக்க வராத ரகுவரன்!. அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே!…

அந்தப் படம் முதலில் சூர்யாவை வைத்துதான் கதை எழுதினாராம் அமீர். ஆனால் சிவக்குமார் கேட்டுக் கொண்டதன் பெயரில் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை எடுத்திருக்கிறார். படத்திற்கான பூஜையையே ஒரு படமாக எடுத்துவிடலாம். அந்தளவுக்கு பூஜையை செய்தாராம் அமீர்.

படத்திற்கான பூஜை பத்திரிக்கையை முதலில் கமலிடம்தான் போய்க் கொடுத்தாராம் அமீர். கூடவே சூர்யாவும் சென்றிருக்கிறார். அந்தப் பத்திரிக்கையை பார்த்ததும் கமல் ‘ நான் விருமாண்டி படத்தில் சொல்ல நினைத்தது. சொல்லாமல் போனது எல்லாம் இந்தப் படத்துல இருக்கு’ என்று சொல்லி பூரிப்படைந்தாராம் கமல்.\

இதையும் படிங்க: உண்மையிலேயே சகலகலாவல்லவன்தான்! கமல் வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை தெரியுமா?

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.