More
Categories: Cinema History latest news

இங்கேயும் விட்டுவைக்கலையா உலகநாயகன்… எங்க போனாலும் விதை அவர் போட்டதா தான இருக்கு!

உலகநாயகன் கமல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அவரது புதுப்புது டெக்னாலஜியுடன் கூடிய வித்தியாசமான படங்கள் தான். ஆரம்பகாலத்தில் இருந்தே தன்னோட படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்பவர் அவர் ஒருவராகத் தான் இருக்கும்.

அந்த வகையில் அவரது படங்களை ஆரம்ப காலகட்டத்தில் இருந்து உன்னிப்பாகக் கவனித்து வந்தால் எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கும். அதே நேரத்தில் படத்திற்குப் படம் கேரக்டர்கள், கதை, இசை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு என பல விஷயங்களில் வெரைட்டியைக் காட்டியிருப்பார். அது அவரது தீராத சினிமா காதலையேக் குறிக்கிறது.

Advertising
Advertising

அந்த வகையில் இப்போது ஒரு செய்தி அவரைப் பற்றி வெளிவந்துள்ளது ஆச்சரியம் தருகிறது.

தமிழ்சினிமா உலகில் முதன் முதலில் பிராஸதடிக் மேக்கப் போட்டது கமல் தானாம். நமக்கு எல்லாம் அப்படி என்றால் அவ்வை சண்முகி தான் முதல் படமாகத் தெரியும். அதில் தான் வித்தியாசமான மேக்கப் என்று நினைத்திருப்போம்.

OKD

இந்தியன் படத்திலும் மேக்கப் போட்டார். அதே சமயம் அவர் அதற்கு எல்லாம் முன்னதாக ஒரு கைதியின் டைரி படத்திலேயே இதற்கான பிராஸ்தட்டிக் மேக்கப்பைப் போட்டு விட்டாராம். இந்தத் தகவல் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் கமல் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காட்சி படத்தின் கிளைமாக்ஸ் தான். வீரசிவாஜியாக கம்பீரமாக சில்வர் கோட்டிங்கை உடல் முழுவதும் பூசியபடி சிலையாக அமர்ந்து இருப்பார். அது தான் பிராஸ்தடிக் மேக்கப்படாம். உண்மையிலேயே உலகநாயகன் என்றால் உலகநாயகன் தான். உண்மையிலேயே பெயருக்குப் பொருத்தமானவர் தான்.

Also read:  https://cinereporters.com/why-kamal-haasan-quit-the-biggboss-tamil-show/

1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான படம் ஒரு கைதியின் டைரி. கமல், ரேவதி, ஜனகராஜ், மலேசியாவாசுதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் கமல் இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாம் அமர்க்களம்.

Published by
sankaran v