கமலுக்கு அது மட்டும் நடக்கலைன்னா இவ்ளோ பெரிய ஆளாயிருக்க முடியாது... பிரபல தயாரிப்பாளர் தகவல்
அப்போ உள்ள சினிமா ட்ரெண்டுக்கும், இப்போ உள்ள ட்ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
நாங்க அப்போது விளம்பரங்களில் வசூலை சுட்டிக் காட்ட மாட்டோம். இதுக்கு பெண்களோட அமோக ஆதரவு இருக்கு. படம் வெற்றிகரமாக அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. குடும்பத்தோட படம் பார்க்கலாம் என்பதைத் தான் கேப்ஷனாகப் போடுவோம். இன்று படம் வெளியான நாலாவது நாளில் ஒன்றரை கோடி சம்பாதிச்சிருக்குன்னு சொல்லி விளம்பரப்படுத்துவது வேடிக்கையாகத் தான் இருக்கிறது.
எங்க தந்தையோடு சேர்ந்து படம் எடுக்கும்போது கதைகளத்தைத் தான் முக்கியமா பார்ப்போம். முதல்ல அந்தக் கதைக்கு யாரு பொருத்தம்? டைரக்டர், இசை அமைப்பாளர் யாருன்னு பேசுவோம். ஆர்டிஸ்டுக்கு கதை பிடிச்சிருந்தா தான் படமே அவர்களை வைத்து எடுப்போம். அன்றைய காலகட்டத்துக்கு அது பொருத்தமா இருந்தது.
இன்று ரஜினி, கமலை வைத்துப் படம் எடுப்போம்னு நினைக்கிறாங்க. அதுக்கு அப்புறம் தான் கதையை செலக்ட் பண்றாங்க. முன்னாடி இருந்த கதையை வச்சி கொஞ்சம் மாற்றி படத்தை எடுக்குறாங்க. முன்னாடி நாங்க கதையை செலக்ட் பண்ணி டைரக்டர்கிட்ட சொல்வோம்.
இப்போ அவங்க கதையை சொல்றாங்க. நாங்க ஓகே சொல்றோம். அவங்க 10 நாள் படம் எடுத்து போட்டுக் காட்டுவாங்க. அது கதைக்கு ஏத்த மாதிரி இருந்தா எடுக்கச் சொல்வோம். அப்படி நாங்களும் எடுத்த சில படங்கள் ஹிட்டாயிருக்கு.
களத்தூர் கண்ணம்மாவுல இருந்து சகலகலாவல்லவன் பீரியடு வரைக்கும் நிறைய ஜம்ப்ஸ் இருந்துச்சு. அப்போ கதை எல்லாம் முக்கால்வாசி ரெடி பண்ணின பிறகு தான் சூட்டிங் போனோம்.
இப்போ முரட்டுக்காளை, சகலகலாவல்லன் எடுக்கும்போது டைரக்டர் அவுட்லைன் சொல்வாங்க. 10 நாள் சூட்டிங் முடிந்ததும் அவங்க சொன்ன கதைக்கும், இதுக்கும் மாறுதல் இல்லாம இருந்தா நாங்க சம்மதிச்சி எடுக்க வைப்போம்.
Also read: எம்ஜிஆர், சிவாஜி, கமலுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் அபிப்ராயம் சொன்ன ரஜினி..! அவருக்கு மட்டும் தமிழா?
அல்லது ஏன் மாறியிருக்குன்னு கேட்போம். அது மாதிரி நாங்க எடுத்த சில படங்களும் வெற்றிகரமா அமைஞ்சிருக்கு. அன்னைக்கு இருந்த ஹீரோவுக்கு 75 ஆயிரம்னா அடுத்த படம் நல்லா ஓடும்போது 1லட்சம் கேட்பாங்க.
அடுத்தும் சூப்பர்ஹிட்டுன்னா ஒண்ணே கால் லட்சம் கேட்பாங்க. அதுபோல தோல்விப் படம்னாலும் அவங்க சம்பளத்தைக் குறைக்க மாட்டாங்க. அன்னைக்கு உள்ள வசூலை தயாரிப்பாளரும் சொல்ல மாட்டாங்க. ஹீரோக்களும் கேட்க மாட்டாங்க. ஜெமினிக்கோ, சிவாஜிக்கோ படம் எவ்வளவு வசூல்னு தெரியாது. 25 வாரம் ஓடியிருக்குன்னு தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.