Connect with us

Cinema News

காலம் கடந்துபோச்சி இப்போ ரஜினியை ஃபாலோ செஞ்சி என்ன செய்ய போறாரோ இவர்.?!

தமிழ் சினிமாவில் இந்த உச்சநட்சத்திரம் பதவி என்பது ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒவ்வொரு முறை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட வருடங்களாக அதில் உச்சாணி கொம்பில் இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

அந்த இடத்தை பிடிக்கவே பலரும் போட்டி போடுவர். அதில் தற்போது ஜெயித்துள்ளவர் என்றால் அது விஜய் தான் என்று கூற வேண்டும். அதற்கடுத்து தான் அஜித் , அதற்கடுத்து இந்த இரு நடிகர்களின் இடத்தை பிடிக்க போராடி வருகின்றனர்.

பலரும் ரஜினியின் பாதையை பாலோ செய்வதுண்டு. விஜயும் ரஜினி ஸ்டைலை பாலோ செய்து தான் இன்று இந்த உச்சத்தில் இருக்கிறார். ரஜினிக்கு நிகராக பார்க்கப்படும் நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான் சம்பள விஷயத்தில் வேறுபாடு இருந்தாலும், நடிப்பு திறனில் கமலை மிஞ்ச இங்கு ஆள் கிடையாது.

இதையும் படியுங்களேன் – வாங்குற காசுக்கு இது தேவைதானா.?! ஐஸ்வர்யா ராஜேஷ் செஞ்ச வேலைய பாருங்க!…

இப்படி இருக்கையில், தற்போது கமல்ஹாசன் ரஜினி ஸ்டைலை பாலோ செய்ய உள்ளாராம். தற்போது தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் ஒரு பக்கா கமர்சியல் படக்கதையை கேட்கிறாராம். பக்கா கமர்சியல் படம் செய்து வருடங்கள் ஆகிவிட்டது அதனால், அப்படி ஒரு படத்தை கேட்கிறாராம் கமல்.

இதன் காரணமாக தான் கொம்பன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானதா என ரசிகர்கள் சிந்தித்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top