பைத்தியமா அவருக்கு?.. அதெல்லாம் சரிவராது.. ரஜினியின் ஐடியாவுக்கு முட்டுக்கட்டை போட்ட கமல்!..
தமிழ் சினிமாவில் இருபெரும் பில்லர்களாக இருப்பவர் நடிகர் ரஜினி மற்றும் கமல். இருவர்களும் 80களில் கொடிகட்டி பறந்தவர்கள். மாறி மாறி பேக் டு பேக் ஹிட் கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையுமே தங்கள் வசம் வைத்திருந்தனர்.
இருவருக்குள்ளும் போட்டிகள் இருந்தாலும் அது பொறாமையாக என்றும் இருந்ததில்லை. அந்த போட்டியே கலைக்கும் அவர்கள் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு நேரத்தில் கமல் நடிப்பில் ஒரு படம் ஹிட் அடித்தால் அப்படியா நானும் ஒரு ஹிட் கொடுக்கிறேன் என்று ஒரு பக்கம் ரஜினி அவரது மாஸை காட்டுவார்.
இந்த போட்டிகளால் தான் 80களில் ஒரு தரம் வாய்ந்த படங்களை நாம் காண முடிந்தது. அந்த நட்பும் போட்டியும் இன்று வரை அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கின்றது. கமலின் விக்ரம் படம் எந்த அளவுக்கு வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அதற்கு இணையாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என ரஜினி நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்களை பற்றிய ஒரு செய்தியை அவர்களுக்கு பரீட்சையமான இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்தார்.
அதாவது கே.எஸ்.ரவிக்குமார் படையப்பா எடுத்த சமயத்தில் எல்லா படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதாம். மொத்தம் 19 ரீல்ஸ்களுக்கு கிட்ட வந்து விட்டதாம். இதை பற்றி ரஜினியுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தாராம் ரவிக்குமார்.
அப்பொழுது ரஜினி ‘ஹிந்தியில் இப்படித்தான் ஒரு படம் அதிக ரீல்ஸ்கள் கொண்டதாக அமைய அந்தப் படத்திற்கு இரண்டு இடைவேளைகள் விட்டு படத்தை ரிலீஸ் செய்தனராம். அந்தப் படமும் பெரிய ஹிட் ஆனது, அதே போல் இந்தப் படத்திற்கும்’
இரண்டு இடைவேளைகள் கொடுத்து விடலாம் என்று ரஜினி கூறினாராம்.
ஆனால் இதற்கு ரவிக்குமாருக்கு உடன்பாடும் இல்லையாம். மறு நாள் ரஜினி ரவிக்குமாரிடம் ‘ நேற்று கமல் சார்கிட்ட இதை பற்றி பேசினேன், அதற்கு அவர் பைத்தியமா? இப்படியெல்லாம் வைத்தால் சரிவராது, அதுவும் தமிழ் சினிமாவிற்கு இது செட்டே ஆகாது, ரவிக்குமாரிடம் இந்தப் பிரச்சினையை விட்டு விடுங்கள், எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார் என்று சொன்னார்’ என ரவிக்குமாரிடம் ரஜினி கூறியிருக்கிறார்.
இதை கேட்டதும் ரவிக்குமாரும் நானும் அதைதான் சொல்கிறேன் என்று இருந்த 19 ரீல்ஸ்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 14 ரீல்ஸ்கள் வரை கொண்டு வந்து அதன் பிறகே ரிலீஸுக்கு வெளியிட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : சினிமா வேஸ்ட்!..சீரியல்லதான் எனக்கு எல்லாம் கிடைச்சுது!.. சிவக்குமாருக்கு இப்படி ஒரு சோக கதையா?..