கோவை சரளாவும், சுருதியும் இல்லைன்னா அந்த படங்களின் நிலைமை அதோ கதிதான்!..ரகசியங்களை பகிர்ந்த கமல்!..
உலக அளவில் தலைசிறந்த நடிகராக திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 63வருடங்கள் கடந்த நிலையில் ஒரு என்சைக்ளோபீடியாகவே விளங்கி வருகிறார் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு.
மேலும் எந்த மொழி படங்களாயினும் அதை சரளமாக பேசக்கூடிய வல்லவர். குறிப்பாக இவரின் நடிப்பில் வெளிவந்த சதிலீலாவதி படத்தில் அழகு கொங்கு தமிழில் பேசிய அந்த மொழி வியக்க வைத்தது. கிண்டலும் குறும்புத்தனமான அந்த பேச்சுக்கு சொந்தக்காரர் நான் இல்லை என்று கூறி பகீர் கிளப்பினார் கமல்.
ஆமாம் எனக்கு அந்த பாஷை பேசுவதில் வாத்தியாராக இருந்தவர் நடிகை கோவை சரளாதான் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரின் அறிவுரையின் படிதான் என்னால் பேச முடிந்தது என்றும் கூறினார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 9 வேடங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற படம் தசாவதாரம்.
அந்த படத்தில் ஃபிளக்ஷர் கதாபாத்திரத்தின் உரையாடலுக்கு சொந்தக்காரியாக இருந்தவர் கமலின் மகளான சுருதிஹாசனாம். அவர் சொல்லிக் கொடுத்ததன் பேரில் தான் கமல் பேசினாராம். எதாவது தவறாக பேசியிருந்தால் ரவிக்குமாரிடம் போய் அப்பா தவறாக பேசிக்க்கொண்டிருக்கிறார். கட் பண்ணுங்கள் என்று சுருதி சொல்வராம். இதை இன்று ஒரு படவிழாவில் நடிகர் கமல்ஹாசனே தெரிவித்தார்.