Connect with us
kamal

Biggboss Tamil 7

படிச்சா மட்டும் நல்லதுனு சொல்லல! படிச்சா நல்லா இருக்கும்னு சொல்றேன் – மொத்தமா குழப்பிய கமல்

BoggBoss Kamal: இந்த வார முதல் நாமினேஷனை சந்திக்க இருக்கிறது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்தான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கையில் சற்றும் வித்தியாசமாக பிக்பாஸ் வீட்டை இரண்டாக பிரித்திருக்கின்றனர். சின்ன பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் வீடு என்றே அழைக்கின்றனர்.

இதையும் படிங்க: தலைவர் 170-க்கு ரிலீஸ் தேதியை குறித்த ரஜினி!.. சிக்குறவன்லாம் சின்னா பின்னம் ஆகணுமாம்!..

இந்த சீசன் ஆரம்பம் முதலே வெடித்து சிதறிக் கொண்டது. அதுதான் இன்று வெளியான ப்ரோமோவில் கமல் கூட வந்த உடனேயே இவர்கள் வீட்டை ரெண்டாக்கி விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். அந்தளவுக்கு வாய் தகராறில் வீடு ரணகளமாக மாறியிருக்கிறது.

இதில் சற்று அதிகபட்சமாக நேற்று நடந்த கல்வி முக்கியத்துவமா இல்லையா என்ற வாக்குவாதத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவிற்கும் இடையில் நடந்த பனிப்போர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானாம்… செல்லாது செல்லாது… கதறும் ரசிகர்கள்..!

கல்வி ஒன்றும் முக்கியமில்லை என்ற கருத்தை முன்வைத்தே ஜோவிகா பேசினார். ஆனால் விசித்ரா ஒரு டிகிரி இருந்தால் நல்லது என்ற கருத்தை முன்வைத்தார். இது அப்படியே வளர்ந்து ஒருமையில் பேச வழி வகுத்து விட்டது.

இதில் எழுத்தாளர் பவா செல்லத்துரையும்  கல்வி அவசியமில்லை என்ற வாதத்தை முன்வைத்த நிலையில் இணையவாசிகள் அதிர்ப்திக்கு ஆளாகிவிட்டனர். பவா செல்லத்துரையா இதை கூறுவது என்று.

இதையும் படிங்க: சிவாஜியின் சூப்பர்ஹிட் படமான தில்லானா மோகனாம்பாள்… ஆனா உண்மையில் யார் நாதஸ்வரம் வாசித்தது தெரியுமா?

இன்று கமல் முதன் முறையாக அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்திக்க இருக்கிறார். அது சம்பந்தமான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அதில் கமல் ஜோவிகாவை பார்த்து ‘ நீங்கள் எப்போதாவது கல்வி முக்கியமில்லைனு சொல்லியிருக்கிறார்களா? விசித்ரா சொல்ல வந்தது தப்பு இல்ல. இது தலைமுறையினருக்கு இடைப்பட்ட இடைவெளியால் வந்த பிரச்சினை.

அதாவது வரலைனா விட்டுவிடவேண்டும். உயிரைக் கொடுத்தாலாவது கல்வி முக்கியமில்லைனு நினைக்கிறவன் நான். குறைகளை சொல்லும் போது உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் பலருக்கும் இருக்காது.கற்றல் விதி இருக்கலாமே தவிர கற்றல் வதை இருக்கக் கூடாது’ என்று கூறுகிறார்.

இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ஆண்டவர் இப்போ என்னதான் சொல்லவராரு? என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் படிப்பு முக்கியமில்லைனு சொன்ன பவா செல்லத்துரையையும் என்னனு கேளுங்க கமல் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top