கமலின் பரிசோதனை முயற்சிகள் பெரும்பாலும் அவரது சொந்த தயாரிப்பாக இல்லாத பட்சத்தில் பிற தயாரிப்பு என்றால் அந்த ஒரு படத்தோடு சரி. அதன்பிறகு காணாமல் போய் விடுகிறார்கள். லட்சுமி மூவி மேக்கர்ஸ் அன்பே சிவம் படத்தை எடுத்தார்கள். அது அப்படித்தான் பிளாப் ஆனது. அதே போல திருப்பதி பிரதர்ஸ் உடன் இணைந்து உத்தம வில்லன் எடுத்தார்கள். அதுவும் காணாமல் போனது.
அடுத்து ஒரு படத்தைச் சொல்ல வேண்டும் என்றால் இதுதான். ஆளவந்தான். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு ‘ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என்றே சொன்னாராம். அந்த அளவுக்கு ரொம்பவே நொந்து போய்விட்டார். அந்தப் படத்தின் போது என்னென்ன சம்பவங்கள் கமல், தாணுவிற்கு இடையே விரிசலை உண்டாக்கின? இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ஆளவந்தான் படம் அப்போது ரொம்ப எதிர்பார்ப்பில் தயாராகிக் கொண்டு இருந்தது. படத்தின் போஸ்டர்களை வாங்க பத்திரிகையாளர்கள் வந்து காத்துக் கிடப்பர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நெருங்கிக் கொண்டு இருந்தது. கமலிடம் இருந்து உத்தரவு வந்தால் தான் படத்திற்கான ஸ்டில்களையே தயாரிப்பாளர் தாணு வெளியிடுவாராம்.

ஒருமுறை தயாரிப்பாளர் தாணு ‘கமலை சந்தித்தபோது சாதாரணமா ஒரு படத்தோட ஆடியோ ரைட்ஸ் எவ்வளவு போகும்னு கேட்டார். அப்போ ஒரு தொகையை நான் சொல்றேன். சரி என்னுடைய படம்னா எவ்வளவு போகும்னு கேட்டார். அதற்கும் ஒரு தொகையை நான் சொல்றேன். உடனே ஒரு செக்கை எடுத்துக் கொடுக்கிறாரு. இதைப் படிச்சிப் பாருங்கன்னு சொல்றாரு.
இதையும் படிங்க… லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?
அந்த ஆடியோ ரைட்ஸைக் கமலே வாங்கிக் கொள்கிறார். அதற்கான தொகையை ரூ.1க்கு வாங்கி இருக்கிறார். அதை தாணு ரொம்ப காலமா பிரேம் போட்டு மாட்டி வச்சிருந்தாராம். அதில் தொடங்கிய விஷயம் தான் ஒவ்வொரு விதமாக மாறி படம் அட்டர்பிளாப் ஆனது.
இதுக்கு அப்புறம் ஆழ்வார்பேட்டை பக்கமே போகமாட்டேன்னு வேறு பாதையில் தான் வீட்டிற்கே செல்வாராம் தாணு. அந்தளவுக்கு பெரிய பனிப்போரே நடந்ததாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
