கமல் கொடுத்த ஐடியா.. அந்த படத்தில் அசத்திய அஜித்.. இது செம மேட்டர்ப்பா!

ajith with kamal
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பல புதுமைகளை புகுத்தி வித்தியாசங்களை காண்பித்து ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் கமல்ஹாசன். நடிப்பு மட்டுமின்றி ஹாலிவுட் படங்களின் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து அதன் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தில் வல்லவர்.
சினிமாத்துறையில் முற்போக்குத்தனமாக சிந்தித்து சினிமாவை படைக்கும் படைப்பாளி. இவரது ”மருதநாயகம்” படம் அன்றைய காலகட்டத்தில் பலராலும் யூகிக்க முடியாத தோற்றத்தில் மாறுபட்ட கதைக்களத்தில் படத்தை எடுத்திருப்பார்.

kamal
ஒரு சில காரணங்கள் படம் பாதியிலே நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு வெளிவந்த ”ஆளவந்தான்” திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் மற்றொரு மைல்கல் ஆகும். சிறிது இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவரின் நடிப்புக்கு தீனி போடும் விதமாக பல தோற்றத்தில் நடித்திருக்கும் படம் தசாவதாரம்.
இப்படத்தில் 10 வேடங்களில் மிரட்டியிருப்பார். பல புதிய டெக்னாலஜியை திறம்பட கையாளக் கூடிய வித்தகர். இவர் அஜித்துக்கு உதவிய ஒரு சம்பவத்தைதான் இங்கே பார்க்க போகிறோம்.

ajith
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இன்று கமர்சியல் ஹீரோவாக வெற்றி நடை போடுகிறார். அறிமுக காலத்தில் சாக்லேட் பாய்யாக வலம் வந்து அதிக பெண்கள் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். பின்பு ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார்.
இவர் ஒரு தீவிர கமல்ஹாசனின் ரசிகர் கூட. கமலுக்கும் அஜித்தின் மீது அளவு கடந்த அன்பு மரியாதையும் கொண்டவர். கடந்த 2000 ஆண்டு தனது திருமண பத்திரிகையை கமலுக்கு கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு அஜித் சென்றுள்ளார். அப்பொழுது அஜித் பல மாறுபட்ட கெட்டப்களில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கமலிடம் கூறினார்.

ajith
இதில் பல கெட்டப்களைபோட்டு நடுப்பதில் வல்லவரான கமல் அஜித்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளார். 2001 ஆம் ஆண்டு வெளியான ”சிட்டிசன்” எனும் படத்தில் சுமார் ஒன்பது வேடங்களில் நடித்திருப்பார்.
இப்படத்திற்கான முந்தைய தயாரிப்பு பணிகளின் போது இப்படக்குழு இந்தியன் படத்திற்கு மேக்கப் செய்த வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருந்தது. இதை அறிந்த கமல் அஜித்திற்கு "இப்ப நம்ம ஊரிலே நல்ல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் எல்லாம் இருக்காங்க" என்று சொல்லி அவருக்கு மும்பையில் உள்ள ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டின் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளார்.
பின்னர் அஜித்தும் அதே மேக்கப் ஆர்ட்டிஸ்டை வரவழைத்து மேக்கப் போட்டுக் கொண்டு நடித்தாராம் என்று பேட்டி ஒன்றில் இயக்குனர் சரவண சுப்பையா தெரிவித்துள்ளார்.