நான் உலகநாயகன் இல்ல.. உலோகநாயகன்!. காமெடியா சொன்னாலும் பின்னனியில் இருக்கும் கமலின் பரிதாபங்கள்..
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக தன் பணியை ஆற்றி வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை இவர் போடாத முயற்சிகள் இல்லை, செய்யாத தியாகங்கள் இல்லை. அந்த அளவுக்கு சினிமாவிற்காக தன் உடம்பையும் வருத்தும் அளவிற்கு உயிரைக் கொடுத்து நடித்து வருகிறார் கமல்.
ஆனாலும் இன்றளவும் நான் ஒரு மாணவனாக சினிமாவில் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று மிகவும் பெருமிதத்தோடு கூறிவருகிறார். அவரை பார்த்து சினிமாவிற்கு வரும் இளைஞர்கள் மத்தியில் நானும் ஒரு மாணவனாகத்தான் இருக்கிறேன் என்று கூறும் போது கேட்கிறவர்களுக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது.
இந்த அளவு சினிமாவே மூச்சு என்று இருப்பதனால் தான் உலகநாயகனாக அனைவரும் மதிக்கக்கூடிய நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தனன் ஒரு பேட்டியில் கமலைப் பற்றி கூறும் போது அந்தனின் நண்பர் ஒரு நாள் கமலை பார்க்க சென்றாராம்.
இதையும் படிங்க : டான் பட இயக்குனர் செய்த காரியத்தால் கைவிட்டுப்போன ரஜினி பட வாய்ப்பு… என்னவா இருக்கும்??
அப்போது அந்த நண்பரிடம் கமல் என்னை எல்லாரும் உலகநாயகன் என்று கூறுகிறார்கள், ஆனால் நான் உலகநாயகன் இல்லை, உலோகநாயகன் என்று கூறினாராம். காரணம் அவர் உடம்பில் ஏகப்பட்ட இடங்களில் ப்ளேட் போட்டுத் தான் ஃபிட் செய்து வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட காலில் ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு வலது காலில் ப்ளேட் வைத்தார்கள். அதே போல் ஏகப்பட்ட இடங்களில் சர்ஜரி என செய்திருப்பதால் இப்படி சொல்லியிருக்கிறார். காரணம் என்னவெனில் கமல் சண்டைக்காட்சிகளை விரும்பி செய்யக்கூடிய நடிகர்.
அதனால் டூப் போட அதிகம் விரும்பமாட்டாராம். பெரும்பாலும் அவரே ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடிப்பாராம். அந்த வகையில் ஏற்பட்ட சில விபத்துக்களால் தான் இந்த அளவுக்கு உடம்பில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக அந்தனன் கூறினார்.