கமலை வச்சு பல கோடி லாபம் பார்த்த லைக்கா நிறுவனம்! ‘இந்தியன்2’ டப்பிங்னு நினைச்சிடாதீங்க - இது வேற மாறி

by Rohini |
kamal
X

kamal

Indian2: கமல் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன்2. இந்தப் படத்தின்ன் முதல் பாகம் ரசிகர்கள் மனதில் சரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் தலைதூக்கி இருந்த பிரச்சினையாக லஞ்சம் கருதப்பட்டது.

அதை தடுப்பதற்காக கமல் எடுத்த ஆயுதம் தான் இந்தியன் படத்தில் தெளிவாக காட்டப்பட்டது. அதன் பிறகு இப்போதைய காலத்திற்கு ஏற்ப அதன் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: விஜய், ரஜினிலாம் ஹீரோக்கள் இல்லை… ஜீரோக்கள்… பொது மேடையில இப்டியா பேசுவீங்க.. கொதித்த பிரபல தயாரிப்பாளர்..!

இந்த நிலையில் இன்று கமலும் ஷங்கரும் டப்பிங் தியேட்டரில் இந்த புகைப்படம் வெளியானது. இந்தியன் 2 க்காகத்தான் என அனைவரும் கருதினர். ஆனால் அது இந்தியன் 2 படத்திற்காக இல்லையாம். இந்தியன் 3 படத்திற்காகத்தான் டப்பிங் பேச வந்தாராம் கமல்.

ஏற்கனவே இந்தியன் 2 படத்தை போட்டுப் பார்த்ததில் படம் நீளமாக இருப்பதாகவும் மீதமுள்ள காட்சிகளை மூன்றாம் பாகமாக வைத்து விடலாம் என்றும் சொன்னதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் ஏற்கனவே இந்தியன் 2 படம் 2017 ஆம் ஆண்டிலிருந்தே புரடக்‌ஷனில் இருப்பதால் சில காட்சிகள் புதுமையாக இல்லை என கருதுகிறார்களாம்.

இதையும் படிங்க: உங்க படத்தை ஓட வச்சதே நாங்கதான்…நண்பன்னு கூட பார்க்காம வெளுத்து வாங்கிய சிவாஜி…

அதனால் சமீபகாலமாக எடுத்ததை மூன்றாம் பாகமாவும் இந்தியன் 2 படத்திற்கு மீண்டும் ரீ சூட் எடுக்கப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகிறது. இந்த நிலையில் மீண்டும் ரீ சூட் எடுக்கும் பட்சத்தில் கமல் அதற்காக 120 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். அதையும் தர சம்மதித்திருக்கிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படத்திற்கு கமலுக்கு மொத்தமாகவே 150 கோடி சம்பளம்தான் தரப்படுகிறது. இது ஒரு வகையில் லைக்காவிற்கு லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கமலுக்கு மன்சூர் அலிகான்… விஜய்க்கு சத்யராஜா? லோகேஷின் ஸ்கெட்சே செம ஸ்பெஷல் தான்..!

கமலின் இப்போதைய சம்பளம் 100 லிருந்து 150 கோடியாக இருக்கும் பட்சத்தில் இது மொத்தமாக 150 கோடி எனும் போது பெரிய லாபம்தான். இந்தியன் 2 படத்திற்கு மொத்தமாகவே கமலுக்கு பேசப்பட்ட அப்போதைய சம்பளம் 30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story