கமலுக்கு கிடைத்த வாய்ப்பு சிவாஜிக்கு இல்லையே… அதனால் தான் இந்த படத்துக்கு இத்தனை லேட்டா?

Sivaji Ganesan: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் இன்றும் அழியாக பெயர் பெற்ற சிலரும் முக்கிய இடம் என்னவோ சிவாஜிக்கு தான். தன்னுடைய நடிப்பால் பலரை மிரட்டி, பலரை அழுகவிட்டு அவர் காட்டிய பரிமாணங்கள் எக்கசக்கம் தான். அப்படி சிவாஜியை குறித்து நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்ய தகவல்கள்.
சிவாஜி படத்தினை ரீமேக் செய்யவே பல மொழி நடிகர்கள் அச்சினராம். இதனால் சிவாஜி மட்டுமே நடித்த படங்கள் அதிகம் ரீமேக் செய்யவே இல்லை. சிவாஜியின் முதல் படமான பராசக்தியிலேயே பல வருட அனுபவம் இருந்தது போலவே நடித்திருக்கிறாரே என பலரும் அதிர்ந்தனர்.
இதையும் படிங்க: வாயாலேயே வட சுடுறத விட்டு செயல்ல காட்டுங்க! ‘லியோ’ படத்துக்கு தயாரிப்பாளர் விடுத்த சேலஞ்ச்
கொடிக்கட்டி பறந்து வந்த சிவாஜிக்கு ஒன்று என்ற எண்ணுக்கும் அத்தனை ஒற்றுமை இருக்கிறதாம். அவர் பிறந்தது அக்டோபர் 1, நட்சத்திரமும் முதலாவதான அஸ்வினி, திருமண தேதி கூட 1ந் தேதி தானாம். ஆனால் சிவாஜி பிறந்ததை அவர் குடும்பம் கொண்டாடவில்லை.
ஒரு குற்றத்திற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தில் சிவாஜியின் தந்தை கைது செய்யப்பட்டு இருந்தார். கணேசமூர்த்தி என அப்பா, அம்மா வைத்த பெயருக்கு முன்னால் சிவாஜி எனப் பெயரை சேர்த்து அவருக்கு கம்பீரத்தினை கொடுத்த பெருமை பெரியாரையே சேரும்.
சங்கிலியாண்டபுரத்தில் தான் சிவாஜி வளர்ந்தார். அவர் அம்மா பால் வியாபாரம் செய்து சிவாஜியையும் அவர் மூன்று அண்ணன்களையும் வளர்த்தார். நாலரை வயது இருக்கும் போது தந்தை ஜெயிலில் இருந்து வெளிவந்தார் அவரின் அப்பா. அப்போதே தந்தையை முதல் முறையாகவும் பார்த்தாராம்.
இதையும் படிங்க: டிரிங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கிய விஜய்!.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…
அப்போதைய காலத்தில் எல்லாம் சின்ன சின்ன நாடக குழுக்கள் நடிக்க அவர்கள் நாடகம் நடத்தும் இடத்திலேயே ஆட்களை தேர்வு செய்வார்களாம். அப்படி தன் குடும்பத்துக்காக வெள்ளைக்கார சிப்பாயாக நாலரை வயதிலேயே நடித்தாராம். அங்கு தொடங்கியது தான் அவரின் நடிப்புக்கான ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. கமலை சின்ன வயதிலேயே சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிவாஜிக்கு குடும்ப கஷ்டத்தால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.