சூர்யாவுக்கு வாட்ச்.. சிம்புவுக்கு இதுதானா? கமல் கொடுத்த கிஃப்ட்.. போட்டோவை பகிர்ந்த சிம்பு

kamal_simbu
Kamal Simbu: தக் லைஃப் படத்திற்கு பிறகு கமலுக்கும் சிம்புவுக்கும் இடையே நெருக்கமான பாண்டிங் உருவாகியிருப்பதாகவே தெரிகிறது. தக் லைஃப் படத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட சிம்புவை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார் கமல். அதுமட்டுமில்லாமல் அவரது அப்பாவை விட சிம்பு அதிகமான அன்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் கூறியிருந்தார் கமல்.

ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படம் ஒரு ஹிஸ்டாரிக்கல் படம் என்பதால் பெரும் பொருட்செலவாகும் என்று கூறப்பட அவ்வளவு பட்ஜெட்டில் படம் பண்ண முடியாது என ராஜ்கமல் நிறுவனம் ஒதுங்கிவிட்டது. அதன் பிறகு அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

அதை ஈடுசெய்யவே கமல் தான் நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு ஒரு முக்கியமான கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்தார். கடைசியில் தக் லைஃப் படம் சிம்புவின் படமாக மாறிப்போனது என கமலே கூறியிருக்கிறாராம். ஏனெனில் தக் லைஃப் படத்தை கமல் பார்த்துவிட்டார். பார்த்த பிறகுதான் இப்படி ஒரு வார்த்தையை கூறியிருக்கிறார் கமல். அதனால் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கான ஸ்கோர் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக் லைஃப் படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக அதன் இசை வெளியீட்டு விழா வரும் 16 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு திடீரென ஒரு போஸ்டை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதாவது கமல் சிம்புவுக்கு தன்னுடைய பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு ஜாக்கெட்டை கிஃப்ட்டாக கொடுத்திருக்கிறாராம்.

அதை அணிந்து போஸ் கொடுத்தவாறு சிம்பு தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஒரு படம் முடிந்து ரிலீஸான பிறகுதான் இந்த மாதிரியான அன்பளிப்பு கொடுக்கப்படும். விக்ரம் படம் ரிலீஸான பிறகுதான் கமல் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்தார். ஆனால் சிம்புவுக்கு முன்னதாகவே கிஃப்ட் கொடுத்திருக்கிறார் கமல்.