“இன்னியோட சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு”.. சந்தோஷத்தை பகிர்ந்த நடிகருக்கு ஷாக் கொடுத்த கமல்..

by Rohini |   ( Updated:2023-03-08 14:47:59  )
kamal
X

kamal

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்து நடிப்பில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். 60 வருட சினிமா பயணத்தை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் தெரியாதது என்ற ஒன்றே இல்லை என்று சொல்லல்லாம்.

அந்த அளவுக்கு சினிமாவை பற்றி நுணுக்கங்களை அறிவை தன்னுள் பெருக்கிக் கொண்டவர். காலங்கள் போனாலும் அவரின் அனுபவத்திற்கு இன்னும் வயதாகாமல் தான் இருக்கின்றது. அப்படி பட்ட கமல் தனக்கு ஒரு நெருக்கமான நண்பராக நல்ல மனிதராக தெரிந்தார் என்று நடிகர் வெண்ணிறாடை மூர்த்தி ஒரு பேட்டியில் கூறினார்.

kamal1

kamal1

அதாவது வெண்ணிறாடை மூர்த்தியின் ஒரு படத்தில் மிகவும் சிறு வயதாக இருக்கும் போது கமல் நடித்திருந்தாராம். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அனைவரிடமும் வெண்ணிறாடை மூர்த்தி சொல்லிவிட்டு கிளம்பினாராம்.

அப்போது வெண்ணிறாடை மூர்த்தியை அழைத்துக் கொண்டு கமல் உள்ளே செல்ல போகும் போதே அனைவரிடமும் வெண்ணிறாடை மூர்த்தி ‘இன்றுடன் நான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது’ என்று கூறியிருக்கிறார்.

kamal2

moorthy

உள்ளே அழைத்துக் கொண்டு போன கமல் வெண்ணிறாடை மூர்த்தியின் பாக்கெட்டில் 10000 ரூபாயை வைத்தாராம். அதோடு இல்லாமல் இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் கூறிவிட்டாராம். அதை இன்று வரை தான் யாரிடமும் எந்த மீடியாக்களிடமும் சொல்ல வில்லை என்று வெண்ணிறாடை மூர்த்தி கூறினார்.

இதையும் படிங்க : பசினா பசி காட்டுப்பசி!.. லைன் அப்பில் இருக்கும் அந்த மாதிரியான படங்கள்.. வெறிகொண்டு அலையும் சிம்பு..

Next Story