திரிஷா இருக்கும் போது இப்படி சொல்லலாமா? அபிராமியிடம் சண்டைக்கு போன கமல்

thuglife
Kamal: இன்று தக் லைஃப் படத்திற்கான பிரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. பல ஊர்களில் இருந்தும் பத்திரிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு இந்த சந்திப்பை படக்குழு நடத்தியிருக்கிறார்கள். இந்த சந்திப்பிற்கு கமல், மணிரத்னம், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் என பலரும் கலந்து கொண்டனர். தக் லைஃப் படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது.
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பலரும் அவரவர் அனுபவத்தை பகிர்ந்தார்கள். அப்போது பேசிய அபிராமி கமலை பற்றியும் கூறியிருந்தார். அதாவது என்னுடைய 11 வது வயதில் இருந்தே கமல் சாரை பார்த்து வருகிறேன். அவருடைய படங்களை நான் பார்த்து வருகிறேன் என்று கூறியிருந்தார். கடைசியாக பேசிய கமல் அபிராமியின் இந்த கூற்றுக்கு பதிலடி கொடுத்தார்.
அதாவது 11வயதில் இருந்து பார்க்கிறேனு சொல்லிட்டீங்க. பக்கத்துல திரிஷா வேற இருக்காங்க. இந்த நம்பர சொல்லாம இருந்திருக்கலாம்.சரி பரவாயில்லை. எல்லாத்தையும் கடந்துதானே வரணும் என கிண்டலாக கூறினார் கமல். ஏனெனில் அபிராமி இப்படி சொல்வதில் கமலின் வயது வெளியில் தெரிகிறது. பொதுவாக யாரும் தன் வயதை வெளிப்படையாக கூற மாட்டார்கள் அல்லவா? அதனால் கமல் இப்படி சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அபிராமிக்கே 11வயதில் இருந்துதான் கமலை பார்க்கிறார் என்றால் அப்போது திரிஷா பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர்களுடன் சிம்புவும் திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் ஜெஸியை நியாபகப்படுத்தினார்கள். அந்த படம் காதலின் நினைச்சின்னம் என்றே சொல்லலாம்.

அந்தளவுக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படம் காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.