சூர்யாவிற்காக நான் இதை செய்ய போகிறேன்...! கமலின் அதிரடியான பேட்டி..!
விக்ரம் படம் வெற்றியை ஒரு பிரம்மாண்டமாக ரசிகர்களும் சரி, திரைபிரபலங்களும் சரி கொண்டாடி வருகிறார்கள். லோகேஷின் இந்த அசத்தலான உருவாக்கத்திற்கு முக்கிய பங்காக இருப்பவர்கள் நடிகர் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சக நடிகர்கள். மேலும் அனிருத்தின் இசையில் விக்ரம் படம் கூடுதல் மெருகேற்றியிருப்பது சிறப்பு.
கடைசி நிமிட காட்சியில் சூர்யாவின் தோற்றம் அனைவரையும் மிரள வைத்தது. படம் முடிந்தாலும் இனிமேல் தான் ஆரம்பம் என மிரட்டுவது போல் சூர்யாவின் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தின் வெற்றியை ஒரு வீடியோ மூலம் பகிர்ந்த நடிகர் கமல், இது எல்லோருடைய வெற்றி ஆகும் என கூறினார். மேலும் இந்த படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்த கமல் தன்னுடன் நடித்த சக நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் போன்றவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் அவர் சூர்யாவை பற்றி குறிப்பிடும் போது “ கடைசி கட்டத்தில் வந்தாலும் திரையரங்கையே அதிர வைத்த அன்புத் தம்பி சூர்யாவிற்கு நன்றி காட்டும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டி விடலாம் என நினைக்கிறேன் “ என்று கூறினார்.