20 வருடங்களில் யாருக்கும் கிடைக்காதது கமலுக்கு கிடைச்சது!.. இயக்குனர் சொல்றதைக் கேளுங்கப்பா!..

Saran, Kamal
உலகநாயகன் கமலைப் பொருத்தவரை சினிமா உலகில் அவர் ஒரு லெஜண்ட். 80கால கட்டங்களில் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் அது சூப்பர்ஹிட் தான். அதே போல அந்தப் படத்தில் உள்ள எல்லாப் பாடல்களுமே ஹிட் அடிக்கும். ஆனால் கடந்த 20 வருடங்களாக எல்லாப் பாடல்களும் ஹிட் அடித்தது என்றால் அது அந்தப் படம் தான் என்கிறார் இயக்குனர் சரண். வாங்க என்ன சொல்றார்னு பார்ப்போம்.
பரத்வாஜைப் பொருத்தவரை ரீ ரிக்கார்டிங் ஒவ்வொரு படத்துக்கும் வேற மாதிரி வேற மாதிரி இருக்கும். அந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருப்பார். நான் வந்து இளையராஜா வெறியன். அவரோட ஒவ்வொரு பாடலையும் ரசிச்சிருக்கேன். அவருக்கிட்ட போகப் பயம். அவரை வந்து நான் எங்கயுமே விட்டுக்கொடுக்க முடியாது. ராஜா சாரோட யாரையுமே கம்பேர் பண்ண முடியாது.
நான் சிரம் தாழ்த்தி அக்செப்ட் பண்ணிக்கறது பரத்வாஜோட ரீ ரிக்கார்டிங். அது ஆத்மார்த்தமான இசை. ஜெமினி, ஜேஜே படங்களைச் சொல்லலாம். ரொம்ப அருமையாக இருக்கும். அதுல ஒரு லவ்வோடு பண்ணுவார். ஜே ஜே படத்தைப் பார்த்தால் தெரியும். படத்துல லவ் வரும்போது இவரது ரீ ரிக்கார்டிங் அதுக்கு நல்ல எபெக்ட்டக் கொடுக்கும் என்கிறார் சரண்.

Vasool Raja MBBS
அதே போல அட்டகாசத்துல தல போல வருமா பாட்டு. ஹீரோவோட சாங் எப்படி இருக்கணும்கறதுக்கு முன்னுதாரணமா இதைச் சொல்லலாம். அப்புறம் அதுல ஒரு மெலடி சாங். அதே மாதிரி வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்துல கடைசி 20 வருஷத்துல எல்லாப் பாடல்களும் ஹிட் எதுன்னா பெருமையா சொல்வேன் இந்தப் படத்தை.
காடு திறந்தே என்ற மெலடி பாடல். அதுல இவர் பண்ணிய நகாசு வேலைகள் எல்லாமே அருமையாக இருக்கும். அதே போல வட்டாரம் படம் டோட்டலா வேற லெவல் ரீ ரிக்கார்டிங். அது நல்ல ஒரு எனர்ஜியைக் கொடுக்கும். என்று பரத்வாஜின் இசையைப் பற்றிய கூடுதலான தகவல்களையும் தருகிறார் சரண்.
இதையும் படிங்க... 200 நாட்கள் ஓடிய கேப்டன் விஜயகாந்த் படங்கள்… ஒரே ஆண்டில் 4 வெற்றிப்படங்கள்!..
ஆட்டோகிராப், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம்னு மற்ற இயக்குனர்களுக்கும் நல்ல மியூசிக் போட்டுருப்பாரு. நயன்தாரா விக்னேஷ்வரன் ராயல்டி கொடுக்கணும்னா பரத்வாஜ்க்குத் தான் கொடுக்கணும். ஏன்னா அவங்களோட ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற அந்தப் பாடல் தான் பட்டி தொட்டி எங்கும் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது. அப்படிப்பட்ட ஒரு பாடலைக் கொடுத்தவர் பரத்வாஜ் தான் என்கிறார் இயக்குனர் சரண்.