anbulla kamal
உலக நாயகன் கமல் பல படங்களில் கௌரவ வேடங்களில் வந்துள்ளார். ஆனால் இந்த நடிகருடன் ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து அதுவும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர் யார் தெரியுமா? விஜயகாந்த் தான்.
மனக்கணக்கு
இந்தப்படத்தில் திரைப்பட இயக்குனராக கமல் வருகிறார். விஜயகாந்த்துடன் ராதா, ராஜேஷ், சரத்பாபு, மாலாஸ்ரீ, அம்பிகா, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.சி.சக்தி இயக்கிய இந்தப்படத்தில் அக்காவும், தங்கையும் இணைந்து நடித்துள்ளனர். அதுவும் இருவரும் சொந்தக்குரலில் பேசி நடித்த ஒரே படம் இதுதான். இந்தப்படத்தில் நடித்த அந்த இருவர் யார் தெரியுமா? அவர்கள் தான் அம்பிகாவும், ராதாவும்.
1986ல் வெளியான மனக்கணக்கு படத்தில் தான் இத்தனை சுவாரசியங்களும் உள்ளன. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இது ஒரு நகைச்சுவை படம்.
தில்லு முல்லு
ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்திலும் கமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். 1981ல் வெளியான இந்தப்படம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை படம். ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கமலுடன் ப்ரதாப் போத்தனும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தில் கமல் வக்கீலாக நடித்துள்ளார். இந்திரன் கேரக்டரில் வரும் ரஜினிக்கு வக்கீலாக வந்து தேங்காய் சீனிவாசனுடன் இவர் பேசும் காட்சி அமர்க்களமாக இருக்கும். கமலின் முந்தைய படங்களான இளமை ஊஞ்சலாடுகிறது, 16 வயதினிலே, உணர்ச்சிகள் ஆகிய படங்களை கோர்வையாக இணைத்து நகைச்சுவையாக இந்தக் காட்சியில் பேசி அசத்தியிருப்பார்.
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இது ஒரு நகைச்சுவை படம். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம் இது. 1994ல் வெளியான இந்தப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். கமல் கதை எழுதி தயாரித்துள்ளார். கிரேசி மோகன் வசனம் எழுதியுள்ளார். இந்தப்படத்தில் நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி, நாகேஷ், ரேணுகா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர்.
நளதமயந்தி
மௌலி இயக்கிய நளதமயந்தி படம் முழுக்க நகைச்சுவை தான். இப்படத்திற்காக கமல் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். இது கமலின் சொந்தப் படம். இதில் நாயகியாக கீது அறிமுகம் ஆகியுள்ளார். டெல்லிகணேஷ், ஸ்ரீமன், மௌலி, ஸ்ருத்திகா, சந்தானபாரதி, மனோபாலா, விக்ரம் தர்மா, பாலாசிங் உள்பட பலர் நடித்துள்ளனர். 2003ல் வெளியானது. இந்தப்படத்திற்காக கமல் நடிக்கவில்லை. சூடுபட்டதா என்ற பாடலைப் பாடியுள்ளார்.
அன்புள்ள கமல்
அன்புள்ள கமல் என்ற படத்தில் கமல் கௌரவ வேடத்தில் வந்துள்ளார். 2015ல் வெளியான இப்படத்தில் ஜெயராம் நடித்துள்ளார். அவருடன் குஞ்சத் கோபன், மீரா ஜாஸ்மின், லாலு அலெக்ஸ், ஜெயசூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இது 4 ப்ரண்ட்ஸ் என்ற மலையாளப்படத்தின் டப்பிங் படம். புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து கமல் அசத்தலாக பேசிய படம் இது. சாஜி சுரேந்திரன் இயக்கிய படம் இது.
பார்த்தாலே பரவசம்
பார்த்தாலே பரவசம் என்ற படத்தை கே.பாலசந்தர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் மாதவன், சிம்ரன், சிநேகா, விவேக், மணிவண்ணன், நிழல்கள் ரவி, மதன்பாபு ஆகியோருடன் கமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். தனது குருநாதருக்காக இந்த வேடத்தை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2001ல் இந்தப்படம் வெளியானது.
மீன் குழம்பும் மண் பானையும்
மீன் குழம்பும் மண் பானையும் என்ற இந்தப்படத்தில் கமல் கௌரவ வேடத்தில் பிரபுடன் இணைந்து நடித்துள்ளார். 2016ல் வெளியான இந்தப்படத்தை அமுதேஸ்வர் இயக்கியுள்ளார். இது பிரவுவின் 200வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து ஆஷ்ணா சாவேரி, பூஜாகுமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…