"அஜித் உயிரோட தான் இருக்கார்.. என் படத்துல வில்லனா நடிக்கணும்!".. மனம் விட்டு பாராட்டிய கமல்...
நடிகர் அஜித்குமார் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசிய த்ரோபேக் பேட்டி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த அஜித்குமாரின் அடுத்த கட்ட பைக் சுற்றுப்பயணம் குறித்த தகவலை சில நாட்களுக்கு முன் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.
அதில், "லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது." என சுரேஷ் சந்திரா ட்வீட் செய்திருந்தார். மேலும் அடுத்ததாக அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் அஜித் குறித்து 2006 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் பேசியுள்ள கருத்துக்கள் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், "வரலாறு, படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. மீண்டும் அஜித்தை கோலிவுட் ரேஸில் பார்த்ததில் மகிழ்ச்சி. அவரது நடிப்பு குறிப்பாக அந்த பெண்மை மற்றும் சைக்கோவாக நடித்திருந்தது என்னைக் கவர்ந்தது. என்னுடைய ஆரம்பகால படங்கள் எனக்கு ஞாபகம் வந்தன. அஜித், பரிசோதனை முயற்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
வரலாறு படத்தில் நடிக்க ஆரம்பத்தில் நான் தயங்கினேன். அஜித் அதிர்ஷ்டசாலி அந்த வாய்ப்பைப் பிடித்துவிட்டார். கோலிவுட்டில் தான் சாகவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் விமர்சகர்களை எப்படி எதிர்கொண்டார் என்பதை நான் அறிவேன். அஜித்தை பாராட்டுகிறேன்.
அஜித், என் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், அவர் ரசிகர்களின் இதயத்தை கவரும் வேலையை செய்வார் என நான் நம்புகிறேன், ஆனால் அது நான் மற்றொரு அஜித்தாக இருந்தால் மட்டுமே சாத்தியம்." என கமல்ஹாசன் பேசி இருக்கிறார்.