நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனை குறித்து நாம் தனியாக கூற வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் என்று கூறினால் கூட அது மிகையாகாது.
ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்களில் ஒவ்வொன்றுக்கும் வித்தியாசத்தை காட்டியவர் அவர். ஒரு படத்தில் தான் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தின் சாயல் கூட, இன்னொரு படத்தில் தென்படாது. அந்தளவுக்கு மிகவும் கச்சிதமாக நடிக்கக்கூடியவராக திகழ்ந்தார்.
அக்காலகட்டத்தில் ஹாலிவுட்டில் கூட பிராம்ப்ட் முறையில் வசனங்கள் பேசப்பட்டு வந்த நிலையில், எவ்வளவு பெரிய வசனங்களாக இருந்தாலும் பிராம்ப்ட் இல்லாமல் மிக கோர்வையோடு பேசக்கூடியவராகவும் அந்த வசனங்களுக்கு ஏற்ற உணர்ச்சிகளையும் மிக பொருத்தமாக வெளிப்படுத்தக்கூடியவராகவும் பலரை அதிசயிக்க வைத்த நடிகர் அவர்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு நேயர் சிவாஜியை குறித்து ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதாவது “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 47 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த சாதனையை வேறு யாராவது முறியடித்திருக்கிறார்களா?” என்ற கேள்விதான் அது.
இந்த கேள்விக்கு சித்ரா லட்சுமணன் “நடிகர் திலகத்தின் அந்த சாதனையை அவரது சீடரான உலக நாயகன் கமல்ஹாசன் முறியடித்திருக்கிறார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த கன்னியாக்குமரி திரைப்படம் 1974 ஆ,ம் ஆண்டிலே வெளியானது. அதை கணக்கில் வைத்துக்கொண்டால் கடந்த 48 ஆண்டுகளாக கதாநாயகனாக கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கிறார்” என பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாலு பேர் நாலு விதமா பேசுனதுனால வந்த விரக்தி… அஜித் பத்திரிக்கை பேட்டிகளை மறுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…