Connect with us

Cinema News

அந்த விஷயத்தையே கமல் இப்போதான் செய்யகிறாரா?.. அப்போ கல்கி படத்தில் வாம்மா மின்னல் கதைதானா?..

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படத்தின் புரமோஷன்களில் இதுவரை கமல்ஹாசனை காட்டாமல் இருக்க காரணமே அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றே கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இதுவரை கமல்ஹாசனை போஸ்டரில் கூட கல்கி படக்குழு காட்டவே இல்லை.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி மற்றும் பசுபதி நடிப்பில் உருவாகி உள்ள கல்கி 2898 ஏடி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா என நடிகையர் திலகம் படத்தில் நடித்த நடிகர்களும் இந்த படத்தில் கேமியோவாக வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு புஜ்ஜி காருக்கு குரல் கொடுக்கும் வேலையை நாக் அஸ்வின் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சூரியுடன் எஸ்.கே.வுக்கு இப்படி ஒரு கூட்டா!… சைலண்டா எல்லா வேலையும் பாக்குறாங்க!…

கமல்ஹாசன் தான் இந்த படத்தில் வில்லன் எனக் கூறப்பட்டது. ஆனால், இதுவரை அவர் பற்றிய எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு ரகசியமாக வைத்திருக்க வெயிட்டான ரோலாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், கல்கி 2 படத்தில் தான் கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் உள்ளதாகவும் கல்கி படத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே கமல்ஹாசன் வந்து செல்வார் என்றும் கூறுகின்றனர்.

இந்த மாதம் 27ம் தேதி கல்கி படம் வெளியாக உள்ள நிலையில், கடைசியாக இன்று தான் கல்கி படத்துக்கான டப்பிங்கையே கமல்ஹாசன் செய்வதற்கு வந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி வீடியோவும் வந்திருக்கிறது.

இதையும் படிங்க: ஒரே மந்தையில் இரு ஆடுகள்! முந்திக்கொண்ட பிரசாந்த்.. லெட்டர் பேடிலேயே உயிர் வாழும் விஜய்

வரும் ஜூன் 10ம் தேதி கல்கி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் கமல்ஹாசன் டப்பிங் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளார். 15 நிமிட காட்சிக்க்கு சில மணி நேரங்கள் ஒதுக்கினாலே அவர் சிங்கிள் டேக்கில் டப்பிங்கை முடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top