150 கோடி சம்பளம்.. பிரபல ஹீரோவுக்கு வில்லனாக கமல்.. இந்திய சினிமாவே மிரளும்
கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர். கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது நிறுவனம் ஒன்றைத் துவக்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். KH - House of Khaddar என ஒரு நிறுவனத்தையும் கமல்ஹாசன் நடத்தி வருகிறார்.
தற்போது விக்ரம் படத்தினை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், மனோபாலா, குல்சன் குரோவர், அகிலேந்திர மிஷ்ரா, கல்யாணி ஆகியோர் நடிக்கின்றனர் .
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் இந்த படத்தின் எழுத்தாளர்களாக பணிபுரிகிறார்கள். முத்துராஜ் கலை இயக்குனராக பணிபுரிய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 படத்தினை தொடர்ந்து கமல், மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் & மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளனர்.
கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் புதிய படத்திற்கு முன்னதாக இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன் இந்த வினோத் படத்திற்காக 35 நாட்களுக்கு கால்சீட் கொடுத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் பிரபாஸிற்கு வில்லனாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக 20 நாட்கள் கால்சீட் கொடுத்ததாகவும் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே, திஷா பதானி,