Connect with us

Cinema News

அது வேற வாய்…இது வேற வாய்…இப்படி மாட்டிக்கிட்டியே ஆண்டவா!…வீடியோ ஆதாரம் இதோ.

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனுக்கு மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்றே கூறலாம். இதனையடுத்து, கமல்ஹாசன் பேசிய வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் பேசியிருந்தது ஒரு விஷயம் கஷ்டப்படாமல் கிடைக்கவே கிடைக்காது. அப்படி இருக்கும்போது எனக்கு வேர்க்குது… இடுப்பு வலிக்குது இதெல்லாம் போய் ஆடியன்ஸ்கள் கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..?

அவர்கள் பார்க்கும் பொழுது என் கால் உடைந்து இருந்தாலும் நன்றாக நடனம் ஆடுகிறாறா என்பதை பார்ப்பது தான் அவர்களுடைய வேலை.எனக்கு அடிபட்டிருக்கு என கோயில் வாசலில் உட்கார்ந்து இருக்கிற பிச்சைக்காரன் மாதிரி என்னுடைய காயத்தை காட்டி காசு வாங்க மாட்டேன் என் திறமையை காட்டி காசு வாங்குவேன்” என்று பேசியிருந்தார்.

இதையும் படியுங்களேன்-கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யார் தெரியுமா.? வெளியான சூப்பர் சீக்ரெட்….

kamal1_cine

இதனை பார்த்த ஒரு குரூப்ஸ் மற்றோரு நடிகரை தாக்கி அந்த வீடியோவை ரெண்ட் செய்து வந்தார்கள். இதனையடையது கமல்பேசிய அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பு கமல்ஹாசன் தன்னுடைய காலில் பிளேட் வைத்திருப்பதாக வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

kamal_main_cine

அந்த வீடியோவில் எல்லாமே கஷ்டம் தான் …பத்தல பத்தல பாடலில் நடனமாடியது ஈஸி எல்லாம் கிடையாது. என்னுடைய காலில் ராடு வைத்திருக்கிறார்கள். படத்தில் அதே வசனமாக கூட வரும்.. உள்ளே ராடு வைத்திருந்தார்கள் அதை எடுத்து இரண்டு மூணு சர்ஜரி ஆயிடுச்சு ” என்று பேசியுள்ளார். இப்படி முன்னதாக பேசிய கமல் தற்போது காயத்தை காட்டி காசு வாங்க மாட்டேன் என் திறமையை காட்டி காசு வாங்குவேன் என்று மாத்தி மாத்தி பேசுவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top