More
Categories: Cinema News latest news

600 நாள் ஓடிய கமல்ஹாசன் திரைப்படம்… விக்ரம் படத்தையும் மிஞ்சிய ஹிட்…

உலக நாயகன் என்று போற்றப்படும் கமல்ஹாசன், சினிமாத்துறையில் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. அவர் நடிக்காத கதாப்பாத்திரமே இல்லை என்று கூறலாம். அதே போல் அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தாத தொழில்நுட்பமே இல்லை. எப்போதும் புதுமையை விரும்பும் கமல்ஹாசன் அதற்கான விலையையும் கொடுக்க வேண்டியவராக இருந்தார். அவரது திரைப்படங்கள் தொலைநோக்குப் பார்வையோடு திகழ்வதால், பல திரைப்படங்கள் 10 வருடங்கள் கழித்துத்தான் கொண்டாடப்படும்.

Advertising
Advertising

ஆதலால் அவரது பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. சினிமா அவரை பல முறை கைவிட்டாலும் அவர் சினிமாவை கைவிட்டதே இல்லை. அந்த அளவுக்கு ரத்தமும் சதையுமாக சினிமாவிலேயே ஊறிப்போனவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் 400 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கமல்ஹாசனின் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக விக்ரம் அமைந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கும் உதவி இயக்குனருக்கும் அதில் நடித்த சூர்யாவுக்கும் பரிசுகளை அள்ளிக்கொடுத்தார் கமல்ஹாசன்.

எனினும் “விக்ரம்” திரைப்படத்தை விட அதிகளவில் வெற்றிபெற்ற ஒரு கமல்ஹாசனின் திரைப்படத்தை குறித்துத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். அத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம். அதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக சரிதா நடித்திருந்தார். அத்திரைப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படம் பெங்களூரில் மட்டும் 693 நாட்கள் திரையரங்குகளில் ஓடியிருக்கிறது. மேலும் சென்னையில் 500 நாட்கள் ஓடியிருக்கிறது. இத்திரைப்படத்தின் பெயர் “மரோ சரித்ரா”.

Published by
Arun Prasad