More
Categories: Cinema News latest news

ரஜினியின் ஹிட் படத்திற்காக கமலுக்கு நன்றி சொன்ன இயக்குனர்… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சந்திரமுகி”. இதில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். “சந்திரமுகி” திரைப்படம் 1000 நாட்கள் திரையரங்குகளில் ஓடி புதிய சாதனை படைத்தது. மேலும் காலம் போற்றும் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Chandramukhi

ஹாரர் படத்தில் ரஜினி!

Advertising
Advertising

“சந்திரமுகி” திரைப்படம் ஒரு பேய் திரைப்படம் என்று கேள்விப்பட்ட ரசிகர்கள், இது போன்ற படங்கள் எல்லாம் ரஜினிக்கு செட் ஆகுமா? என சந்தேகப்பட்டனர். நிச்சயமாக இத்திரைப்படம் ஓடாது என்றே நினைத்தனர்.

Chandramukhi

மேலும் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு பேட்டியில் ரஜினிகாந்த் “சந்திரமுகி படத்திற்கு முதல் வாரத்தில் வரவேற்பு குறைவாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பின் வரவேற்பு பல மடங்கு எகிரும்” என கூறியிருந்தார். அவர் கூறியபடியே நடந்தது. அதாவது “சந்திரமுகி” திரைப்படத்திற்கு முதல் வாரத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இருந்து அமோக வரவேற்பு இருந்தது.

தான் யார் என்பதை நிரூபித்த ரஜினி

“பாபா” திரைப்படத்தின் தோல்வியால் துவண்டு போயிருந்த ரஜினிகாந்த், தனது அடுத்த திரைப்படத்தில் தான் யார் என காட்டவேண்டும் என்று நினைத்தார். அதன் படி மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்த கதைதான் சந்திரமுகி.

இதையும் படிங்க: மிஷ்கின் பேச்சுக்கு எதிர்வினை இல்லையா?? கம்முன்னு கிடக்கும் கோலிவுட்!! பயப்படுறியா குமாரு??

P Vasu

கன்னடத்தில் வெளிவந்திருந்த “ஆப்தமித்ரா” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், உடனே சிவாஜி புரொடக்சன் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு  “பி.வாசுதான் எனது அடுத்த படத்தை இயக்குகிறார்” என கூறினாராம். “ஆப்தமித்ரா” திரைப்படத்தை பி.வாசுதான் இயக்கியிருந்தார். அத்திரைப்படத்தின் ரீமேக்தான் சந்திரமுகி. அதே போல் மலையாளத்தில் வெளிவந்த “மணிச்சித்ரதாழு” திரைப்படத்தின் ரீமேக்தான் “ஆப்தமித்ரா”.

கமல்-ரஜினி நட்பு

Rajini and Kamal

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் கிட்டத்தட்ட 17 திரைப்படங்களுக்கு மேல் இணைந்து நடித்திருக்கின்றனர். 1970களில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக ரஜினி-கமல் கூட்டணி அமைந்தது. இந்த நிலையில் “சந்திரமுகி” திரைப்படத்தின் டைட்டிலில் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருக்கும் செய்தி ஒன்று தெரியவந்துள்ளது.

Chandramukhi

தேவர் மகன்

Chandramukhi

இது குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசியுள்ள பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன், “சந்திரமுகி” திரைப்படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி கணேசனின் புகைப்படம் ஒன்று இடம்பெறும், அந்த காட்சிக்கு பின்னணியில் தேவர் மகன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு இசை ஒலிக்கும், ஆதலால் கூட கமல்ஹாசனுக்கு நன்றி கூறியிருக்கலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Arun Prasad

Recent Posts