More
Categories: Cinema News latest news

ஷங்கர் பூட்டி வைத்த ரகசியம்!.. இந்தியன் 3ல் இப்படியொரு ரோல்!.. திடீரென உளறித்தள்ளிய கமல்?

பிரபாஸ் உடன் கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமான கமல்ஹாசன் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் சாகும் நடித்தது போல சிறிய கேமியோவில் வந்தாலும் படத்தின் மையக்கருவை தாங்கி நிற்கிறார். கல்கி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி கமல்ஹாசனை மீண்டும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆறு ஆண்டுகளுக்கு மேல் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷனை இந்தியாவைத் தாண்டி மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நடத்தி வருகிறார் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: எல்லா சைடும் விழுந்த அடி!.. உடனடியாக வெங்கல் ராவுக்காக வடிவேலு செய்த செயல்.. என்ன தெரியுமா?..

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியன் திரைப்படத்தில் சேனாபதியே தந்தையாகவும் தான் நடித்திருப்பதாக மிகப்பெரிய சீக்ரெட் ஆன விஷயத்தை கூட்டத்தில் கட்டுச் சோற்றை அவிழ்ப்பது போல கூறிவிட்டார்.

இந்தியன் 2 படத்தில் ஏழு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ள கமல் இந்தியன் திரைப்படத்தில் ஐந்து கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறார். ஒட்டுமொத்தமாக தசாவதாரத்தின் தாண்டி 12 வேடங்களில் இந்த படத்துக்காக கமல்ஹாசன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அப்போ நடிச்சாரே கார்த்திக்… அதுக்கு அப்புறம் என்னாச்சு? இப்படி மிஸ் பண்ணிருக்காரே..!

அதிலும் குறிப்பாக சேனாபதி தந்தையாக கமல்ஹாசன் எப்படி தோன்றப் போகிறார் என்பதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும் விஷயமாக மாறியுள்ளது.

கல்கி படத்தில் தான் சிறிய ரோல் தான் செய்துள்ளேன் என்றும் கல்கி 2 படத்தில் தான் தனக்கு நிறைய வேலைகள் உள்ளன என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தியன்2 மற்றும் 3 என அடுத்தடுத்து ஷங்கர் படங்களும், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2 என கமல் இந்த வயதிலும் பெரிய லிஸ்ட்டையே வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு… இந்தியன் 2 தாத்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?

Published by
Saranya M