பிரபாஸின் சலார் படத்தின் ஒட்டுமொத்த கதையே ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவது தான். அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகும் ஸ்ருதிஹாசனுக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லையே என கவலைப்பட்ட கமல்ஹாசன் சிம்பு, சிவகார்த்திகேயனுக்கெல்லாம் நம்ம பேனர்ல படங்களை தயாரித்து வருகிறோம். நம்ம பொண்ணு ஸ்ருதிஹாசனுக்கும் ஒரு படம் பண்ணுவோமே என முடிவு செய்துள்ளார்.
விக்ரம் படம் தான் கமல்ஹாசனுக்கு மீண்டும் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. வேட்டையன் படப்பிடிப்பு நிறைவடைந்து தலைவர் 171 ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களாவது ஆகும் என்பதை அறிந்துக் கொண்ட கமல்ஹாசன் அதற்குள் லோகேஷ் கனகராஜை வைத்து ஒரு படத்தை பண்ணிடலாம் என மாஸ் பிளான் போட்டு விட்டார் போலத் தெரிகிறது.
இதையும் படிங்க: மீண்டும் தம்பியின் தலையை தடவ போகும் அண்ணன்!.. அந்த படத்தை இந்த வருஷம் எடுக்கப் போறாராம்!..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பை அதிரடியாக அறிவித்து விட்டார். மேலும், வழக்கம் போல தான் பேசுவது புரியாதபடி பார்த்துக் கொள்ளும் கமல்ஹாசன் இந்த படத்தின் அறிவிப்பையும் புரியாத புதிராகவே ”Inimel Delulu is the New Solulu” என கேப்ஷன் போட்டு லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இருக்கும் சூப்பர் ஸ்டில் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளனர்.
மாஸ்டர், சிங்கப்பூர் சலூன் படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இந்த படத்திலும் நடிக்கப் போகிறாரா என்கிற ஆர்வத்தையும் அந்த போஸ்டர் தூண்டியிருக்கிறது. ஆனால், ஸ்ருதிஹாசனின் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தை லோகேஷ் இயக்குவார் என்றே தெரிகிறது. அடுத்த அப்டேட் வரும் போது தெளிவாகி விடும். அப்படியே ரெண்டாவது பொண்ணு அக்ஷரா ஹாசனுக்கும் ஒரு படம் பண்ணினால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜயகாந்த இப்படி அசிங்கப்படுத்தணுமா?!.. வீடியோவால் அதிர்ந்து போன நெட்டிசன்ஸ்!..
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…