Connect with us

Cinema History

இயக்குனர் எவ்வளவு சொல்லியும் சரியாக நடிக்க மறுத்த கமல்!.. இதுதான் காரணமாம்…

திரையுலக நடிகர்களில் டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் தனது முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பை காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஏ.வி.எம் செட்டியாரே கமலின் நடிப்பை கண்டு அந்த படத்தின் கதையையே கமலுக்காக மாற்றி அமைத்தார். அதனை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற்று நடிக்க துவங்கிய கமல்ஹாசன் இப்போது வரை தமிழில் பெரும் நடிகராகவே இருந்து வருகிறார்.

வித்தியாசமான நடிப்பில் கமல்ஹாசன் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் அன்பே சிவம், ஆளவந்தான், குணா மாதிரியான படங்கள் முக்கியமானவை. கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானவர் இயக்குனர் பாலச்சந்தர்.

இவர் இயக்கிய பல படங்களில் கமல்ஹாசனுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை வளர்த்துவிட்டார் பாலச்சந்தர். கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறும்போது பாலச்சந்தருடன் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து கூறியிருந்தார். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிக்கும்போது கமல்ஹாசனுக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது,.

நடிக்க மறுத்த பாலச்சந்தர்:

இந்த படத்தை பாலச்சந்தர் இயக்கினார். அப்போது படத்தில் ஒரு காட்சியில்  இரண்டு கைகளில் சுவற்றை பிடித்துக்கொண்டு டயலாக் பேசுவது போல காட்சிகள் இருந்தன. அதற்காக கேமிராவை வைத்துக்கொண்டு ஆக்‌ஷன் என கூறினார் பாலச்சந்தர். ஆனால் பாலச்சந்தர் கூறியது போல நிற்காமல் கமல் வேறு விதமாக நின்றுள்ளார்.

ஏன் சொல்றபடி நடிக்க மாட்டேங்குற என பாலச்சந்தர் சத்தம் போடவும், ஐயா எல்லா படத்துலையும் இப்படிதான் நிக்கிறாங்க ஐயா நான் கொஞ்சம் மாத்தி நிக்கிறேனே என கமல் கூறியுள்ளார். ஓ இப்பவே உன் இஷ்டத்துக்கு நடிக்கிறியா என அவரை திட்டியுள்ளார் பாலச்சந்தர். இருந்தாலும் கமல் கூறுவதும் சரிதான் என நினைத்தவர் பிறகு கமல் நிற்பதற்கு தகுந்தாற் போல கேமிராவை மாற்றி வைத்து படத்தை எடுத்துள்ளார். இந்த நிகழ்வை பேட்டியில் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன்.

இதையும் படிங்க: எம்.ஆர்.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டாரா?- முக்கியமான கேள்வியை எழுப்பிய திரைப்பட டைட்டில்….

google news
Continue Reading

More in Cinema History

To Top