விக்ரம் வெற்றியால் அடித்த பம்பர் லாட்டரி… லம்ப்பா ஸ்கெட்ச் போட்ட உலக நாயகன்…

by Arun Prasad |   ( Updated:2022-09-24 11:24:02  )
விக்ரம்
X

விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளிவந்து பாக்ஸ் ஆஃபீஸ் அசுரனாக திகழ்ந்த திரைப்படம் “விக்ரம்”. யாருமே எதிர்பாரா வகையில் “விக்ரம்” திரைப்படம் கமல்ஹாசனின் திரைப்பயணத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியினால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரை கமல்ஹாசன் பரிசாக வழங்கினார். அதே போல் இத்திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் பைக்குகளை பரிசாக வழங்கினார். அதுமட்டுமல்லாது “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.

இதனை தொடர்ந்து திடீர் சர்ப்ரைஸாக “இந்தியன் 2” திரைப்படம் மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு வெளிவந்த சில நாட்களிலேயே “இந்தியன் 2” திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. தற்போது மிகவும் மும்முரமாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. “இந்தியன் 2” திரைப்படத்தை ஷங்கர் இயக்க உதயநிதியுடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் “இந்தியன் 2” திரைப்படத்திற்காக கமல்ஹாசன் மிக அதிக சம்பளத்தை பெறவுள்ளராம். அதாவது “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனின் மார்க்கெட் லெவல் அதிகரித்துள்ளது. இதனால் “இந்தியன் 2” திரைப்படத்திற்காக கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளாராம்.

“ஜெயிலர்” திரைப்படத்திற்கு தன்னுடைய சம்பளத்தை ரஜினிகாந்த் குறைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் ரூ. 150 கோடி சம்பளமாக பெறவுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களை வியப்படையவைத்துள்ளது.

Next Story