இதுதான் சமயம்!.. ஸ்ருதிஹாசனை மேடையில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்!.. கதறவிட்ட தாத்தா!..

Published on: June 2, 2024
---Advertisement---

இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் திடீரென இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியன் 2 ஆடியோ லாஞ்சுக்கு வந்த ஹரிசந்திர மகாராஜா!.. யாருன்னு நீங்களே பாருங்க!..

மீண்டும் இந்தியன் 2 படத்தை கமல்ஹாசனின் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து உருவாக்கியது. அதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தியன் 2 படக்குழுவை கடமைப்பட்டுள்ளது என கமல்ஹாசன் பேசினார். எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் வேறு பொறுப்பை கொடுத்துள்ளனர். அவருக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நிச்சயம் நிற்போம் என கமல்ஹாசன் பேசினார்.

மேலும், 69 வயதாகும் கமல்ஹாசன் ஸ்ருதிஹாசன் மனது வைத்தால் இப்ப கூட நான் தாத்தா தான் என்று ஸ்ருதிஹாசன் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒவ்வொரு காதலர்களாக பிரேக்கப் செய்து வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டி அவரை மேடையில் அசிங்கப்படுத்தி விட்டார் என நெட்டிசன்கள் கமல்ஹாசன் பேச்சை வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிரான்ஃபர்மேஷனா இப்படி இருக்கனும்டா! இந்தியன் – இந்தியன்2 அனிருத்தின் வளர்ச்சி.. வைரலாகும் புகைப்படம்

கமல்ஹாசன் அப்படி சொன்னதுமே ஸ்ருதிஹாசன் கொடுத்த ரியாக்ஷன் தான் ஹைலைட்டான விஷயம் என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது 2வது காதலர் சாந்தனு ஹசாரிகா இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது. இவரையாவது ஸ்ருதி திருமணம் செய்துக் கொள்வார் என நினைத்த கமலுக்கு அது ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்கின்றனர்.

இதையும் படிங்க: நீங்க மாலை போட்டதுக்காக நாங்க என்ன சாமி படமா எடுக்க முடியும்? இளையராஜாவை சீண்டிய பாக்கியராஜ்

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.