கால் சென்டர்ல கமல்ஹாசன்!.. அமெரிக்காவுல என்னை வேலை பண்ணிட்டு இருக்காரு பாருங்க ஆண்டவர்!..

Published on: August 31, 2023
---Advertisement---

உலகநாயகனனு கமலை கொண்டாடுறீங்களே அவர் எந்த ஹாலிவுட் படத்தில் நடித்தார் என கிண்டலடித்து வரும் ஹேட்டர்களுக்கு அமெரிக்காவில் மாஸ் காட்டி வருகிறார் கமல்ஹாசன்.

இந்திய சினிமாவை உலகத் தரத்துடன் போட்டி போடும் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து பல தொழில்நுட்ப சரக்குகளை உள்ளூருக்கு கொண்டு வந்து இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு குருநாதராக விளங்கி வரும் கமல்ஹாசன் தற்போது கல்கி படத்துக்காக அமெரிக்காவின் சிக்காகோ நகரில் டென்ட் போட்டு தங்கி உள்ளார்.

இதையும் படிங்க: என் ஃபர்ஸ்ட் லவ்வுக்கு வில்லனே இவர்தான்!.. ஷாருக்கான் முன்னாடியே 96 பட கதையை ஓட்டிய விஜய்சேதுபதி!..

கமல்ஹாசன் சென்னைக்கு திரும்பி வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்க முடியும் என்கிற நிலைமையில் அதற்கான மற்ற வேலைகளை பிக் பாஸ் டீம் செய்து வருகிறது.

அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சியில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்ட கமல்ஹாசன் தற்போது சிக்காகோவில் தலையற்ற மனித சிலைகளின் கால்களுக்கு நடுவே நடந்து செல்லும் போட்டோ ஒன்றை வெளியிட்டு Chicago’s “ கால் “ centre! என அவரே அசத்தலான கேப்ஷனையும் போட்டு நம்ம ஊர் யூடியூப் சேனல்களுக்கு செம தீனி போட்டுள்ளார்.

இதையும் படிங்க: சொந்த படத்துக்கு மட்டும் தான் வருவேன்!.. ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா.. பிரியாமணி தான் கடைசியா!..

கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். சினிமாவையே விட்டு விலகி விட்டார் என்றெல்லாம் தம்ப்நைல் தெறிக்க ஆரம்பித்து விட்டது என அந்த போட்டோவுக்கு கீழ் கமெண்ட் பக்கத்தில் கமல் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு பக்கம் இந்தியன் 2, இன்னொரு பக்கம் பிரபாஸ் உடன் கல்கி 2898 ஏடி அடுத்து சின்னத்திரை ரசிகர்களுக்காக பிக் பாஸ் என படு பிசியாக உள்ள கமல் எப்போது எச். வினோத் படத்தை ஆரம்பிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.