Connect with us

Cinema History

கொரியாவில் ரீமேக் ஆகும் கமல் படம்!.. இது சிறப்பான சம்பவமாச்சே!..

சினிமாவில் கிட்டத்தட்ட 3 தலைமுறைகளாக பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் துவங்கிய இவரது பயணம் விக்ரம் திரைப்படத்தை தாண்டியும் தொடர்ந்து வருகிறது.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார் கமல்ஹாசன். அடுத்ததாக அவர் ஹெச். வினோத் அல்லது மணிரத்னம் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி 100 கோடி ஹிட் கொடுத்த படம் பாபநாசம். மலையாளத்தில் வெளியான த்ரிஷியம் என்கிற திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. தமிழை விடவும் மலையாளத்தில் இந்த கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து மலையாளத்தில் த்ரிஷியம் படத்தின் இரண்டாம் பாகம் வந்தது.

மலையாளத்தில் இந்த படத்தில் மோகன்லால் நடித்தார். தென்னிந்தியாவில் படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கதை ஹிந்தியிலும் த்ரிஷியம் என்கிற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்தார்.

இந்த நிலையில் தற்சமயம் பாபநாசம் படத்தின் கதையை கொரிய மொழியில் படமாக்குவதற்கு அறிவிப்பு வந்துள்ளது. ஹாலிவுட்டில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் கிம் ஜீ வான் இந்த படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கிம் ஜீ வான் இந்த அறிவிப்பை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு பாட வாய்ப்பே வராம போனதற்கு அந்த பாட்டுதான் காரணம்!.. புலம்பிய டி.எம்.எஸ்..

google news
Continue Reading

More in Cinema History

To Top