போதும்டா சாமி.... ஆள விடுங்க... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குட் பை சொன்ன கமல்....!
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. சினிமாவில் மார்க்கெட் குறைந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கு மீண்டும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது.
முதலில் பாலிவுட்டில் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் தான் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நடந்து முடிந்தது.
இதனையடுத்து அடுத்த சீசன் தொடங்கும் வரை பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் கடந்த ஐந்து சீசனிலும் பங்கேற்ற போட்டியாளர்களில் இருந்து சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர்.
இந்நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால், சென்சார் என எதுவும் இன்றி இரட்டை அர்த்த வசனங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. இந்நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இனி கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கமாட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கமல் தற்போது அரசியல் தவிர சினிமாவிலும் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். ஒருபுறம் நடிப்பு மற்றொரு புறம் தயாரிப்பு என எப்போதும் பிசியாக இருப்பதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.