More
Categories: Cinema News latest news

நாங்க மட்டும் என்ன சொம்பையா?- தலைவர் 171 புராஜெக்ட்டுக்கு அப்ளிகேஷன் போட்ட கமல்ஹாசன் நிறுவனம்…

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ, பிரியா ஆனந்த் போன்ற பலரும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ புரொடக்சன்ஸ் லலித் குமார் தயாரித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

Advertising
Advertising

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் கமல்ஹாசனை வைத்து இயக்கிய “விக்ரம்” திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் சுமார் ரூ.400 கோடிகளை வசூல் செய்தது. ஆதலால் “லியோ” திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். மேலும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கியிருந்த “மாஸ்டர்” திரைப்படமும் வேற லெவல் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தின் 171 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. மேலும் இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமாரே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதனை தொடர்ந்து “கே.ஜி.எஃப்” படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனமும், “ஆர்ஆர்ஆர்”  திரைப்படத்தை தயாரித்த டிவிவி நிறுவனமும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தற்போது இந்த நிறுவனத்துடன் மேலும் ஒரு நிறுவனம் ரஜினிகாந்த்தின் 171 ஆவது திரைப்படத்தை தயாரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறதாம்.

அதாவது கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் லோகேஷ் கனகராஜும் ரஜினிகாந்தும் இணையவுள்ள திரைப்படத்தை தயாரிக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறதாம். லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு இருப்பதால் இவ்வாறு பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து இயக்கிய “விக்ரம்” திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லைலா செய்த அட்ராசிட்டியால் பறிபோன படவாய்ப்பு… அப்போவே இவ்வளவு ரகளையை கொடுத்திருக்காங்களே!

Published by
Arun Prasad