Connect with us

Cinema News

இதுவரை வெளியே தெரியாமல் ட்ராப் ஆன உலகநாயகனின் திரைப்படங்கள்… லிஸ்ட் பெருசா இருக்கே!!

ரசிகர்களின் உலகநாயகனாக திகழும் கமல்ஹாசன், “மருதநாயகம்”, “மர்மயோகி”, “தலைவன் இருக்கிறான்”, “சபாஷ் நாயுடு” போன்ற  திரைப்படங்களை எடுக்க முயற்சி செய்து ட்ராப் ஆன செய்திகள் நமக்கு தெரிந்தவை தான். ஆனால் இதுவரை பரவலாக வெளியே தெரியாத கமல்ஹாசன் முயற்சி செய்து ட்ராப் ஆன திரைப்படங்களும் உண்டு. அவ்வாறு பரவலாக அறியப்படாத சில கமல்ஹாசனின் கைவிடப்பட்ட திரைப்படங்களை பார்க்கலாம்.

அதிவீரபாண்டியன்

1990களில் “தேவர் மகன்” திரைப்படத்திற்கு முன்னமே “அதிவீரபாண்டியன்” என்ற திரைப்படம் தயாரானது. இத்திரைப்படத்தை கங்கை அமரன் இயக்குவதாக இருந்தது. இளையராஜா இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் கங்கை அமரனுக்கும் இளையராஜாவிற்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் இத்திரைப்படம் அப்படியே நின்றுபோனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் “தேவர் மகன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “சாந்து பொட்டு சந்தன பொட்டு” என்ற ஹிட் பாடல் “அதிவீரபாண்டியன்” திரைப்படத்திற்காக இசையமைக்கப்பட்ட பாடல் என்பதுதான்.

கண்டேன் சீதையை

ரமேஷ் அரவிந்த், கமல்ஹாசன் ஆகியோரின் நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சதிலீலாவதி”. ஆனால் இத்திரைப்படத்திற்கு முன்பாகவே ரமேஷ் அரவிந்தும் கமல்ஹாசனும் இணைந்து தயாரிக்க முயன்ற திரைப்படம் தான் “கண்டேன் சீதையை”. மலையாளத்தில் அப்போது வெளியான “அம்மாயின சத்தியம்” என்ற திரைப்படத்தை தான் கமல்ஹாசன் “கண்டேன் சீதையை” என்ற பெயரில் ரீமேக் செய்வதாக இருந்தது. ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் நின்றுபோனது.

டாப் டக்கர்

1985 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ரேவதி ஆகியோரின் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஒரு கைதியின் டைரி”. ஆனால் இத்திரைப்படத்திற்கு முன்பே பாரதிராஜா கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கினாராம். அத்திரைப்படத்தின் பெயர் தான் “டாப் டக்கர்”. இத்திரைப்படத்தின் சில காட்சிகளை எடுத்தபின், அக்காட்சிகள் எல்லாம் பாரதிராஜாவிற்கு திருப்தி அளிக்கவில்லை எனவும் ஆதலால் இத்திரைப்படத்தை அப்படியே நிறுத்துவிட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணலீலா

கமல்ஹாசன், கௌதமி ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது . ஆனால் என்ன காரணமோ என்னவோ இத்திரைப்படம் பிக் அப் ஆகவில்லை. இத்திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த ஒரு காதல் திரைப்படமாக உருவாக இருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

லேடிஸ் ஒன்லி

கடந்த 1994 ஆம் ஆண்டு ரேவதி, ரோஹினி, ஊர்வசி ஆகியோரின் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் “மகளிர் மட்டும்”. இத்திரைப்படத்தை ஹிந்தியில் “லேடிஸ் ஒன்லி” பெயரில் ரீமேக் செய்தார் கமல்ஹாசன். “மகளிர் மட்டும்” திரைப்படத்தில் நாகேஷ் இடம்பெற்ற ஒரு காட்சி வரும். அந்த காட்சி ஹிந்தியில் படமாக்கப்பட்டபோது அதில் கமல்ஹாசன் நடித்தார். “லேடிஸ் ஒன்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையிலும் அத்திரைப்படம் சில காரணங்களால் வெளிவராமல் போனது.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top