தமிழ் சினிமா துறையில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். இந்த விஷயங்களே தமிழ் சினிமாவில் கமல்ஹாசனை ஒரு தனித்துவமான நடிகராக காட்டுகிறது. இறுதியாக வந்த விக்ரம் திரைப்படம் வரையிலும் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தவர் கமல்.
கமல்ஹாசனுக்கு இயக்கமும் நன்றாக வரும் என்பதால் அவர் நடிக்கும் திரைப்படங்களின் திரைக்கதைகளில் தலையிடுவார் கமல். கே.எஸ் ரவிக்குமார் போன்ற சில இயக்குனர்கள் கமல்ஹாசன் கதையை மாற்றி அமைக்க சொன்னால் அதற்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்துவிடுவார்கள்.
ஆனால் அனைத்து இயக்குனர்களும் அப்படி இருக்க மாட்டர்கள் அல்லவா. 1990 ஆம் ஆண்டு இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மைக்கேல் மதன காம ராஜன். இந்த படத்தில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் கமல்.
இந்த படத்தை முழுவதுமாக நகைச்சுவையாக எடுக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர். எனவே படத்தின் க்ளைமேக்ஸும் கூட நகைச்சுவையாக இருக்க வேண்டும் என அவர் திட்டமிட்டிருந்தார். படத்தின் தயாரிப்பாளரான பஞ்சு அருணாச்சலத்திற்கு இந்த காமெடி க்ளைமேக்ஸ் பிடித்திருந்தது.
ஆனால் படத்தின் க்ளைமேக்ஸ் நான் சொல்கிறப்படிதான் இருக்க வேண்டும். க்ளைமேக்ஸ் சற்று சீரியஸாக இருக்க வேண்டும் என பிரச்சனை செய்துள்ளார் கமல்.
அதன் பிறகு சார்லி சாப்ளினின் பழைய திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை அடிப்படையாக கொண்டு கமல்ஹாசன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை வடிவமைத்துள்ளார். இறுதியாக கமல் சொன்னது போல க்ளைமேக்ஸ் காட்சி அமைந்தாலும் அந்த படம் நல்ல வெற்றியைதான் கொடுத்தது.
இதையும் படிங்க: கோபப்பட்ட இயக்குனர்.. சிவாஜி காலில் விழ்ந்த சிம்ரன்.. நடந்தது இதுதான்!..
AR Rahman:…
Pushpa 2:…
தமிழ் சினிமாவில்…
சொர்க்கவாசல் திரைப்படம்…
Lucky Bhaskar:…