பக்கா ஸ்கெட்ச் போட்ட கமல்! ஒன்னு இல்ல - டபுள் ட்ரீட் கொடுக்க களத்தில் இறங்கும் ஆண்டவர்

by Rohini |
kamal
X

kamal

Actor Kamal: கிட்டத்தட்ட 60ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக சர்வதேச அளவில் ஜொலிக்கும் நடிகர்தான் கமல். சினிமாவில் இவருக்கு தெரியாத துறைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பல புதிய புதிய தொழில் நுட்பங்களை சினிமாவில் புகுத்தி தமிழ் சினிமாவையே தலை நிமிர வைத்ததற்கு கமலும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இளையராஜா செய்த வேலையில் கண்ணீர் விட்டு கதறிய பாரதிராஜா!.. அட அந்த படமா?!…

ஏற்கனவே கமலும் எச்.வினோத்தும் இணைவதாக சில செய்திகள் வெளியானது. அந்தப் படம் இந்த மாதம் நவம்பர் அல்லது டிசம்பரில் ஆரம்பிக்கப்பட இருப்பதாக இருந்தது. இதற்கிடையில் கமலும் மணிரத்தினமும் இணையும் ஒரு புதிய பட அறிவிப்பினை வெளியிட ஒரு வேளை எச்.வினோத் படம் டிராப் ஆகிவிட்டதா என்ற சந்தேகமும் இந்தது.

ஆனால் இன்று வெளியான தகவலின் படி உறுதியாக கமலும் எச்.வினோத்தும் இணைவதாகவும் அந்தப் படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாத மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் 3 படம் உருவானதால் எழுந்த பிரச்சினைதான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தளபதி 68ல் களமிறங்கும் கவர்ச்சி புயல்!.. அட அப்ப ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்தான் போல!..

மேலும் மணிரத்தினம் படத்தையும் எச்.வினோத் படத்தையும் ஒன்றாகத்தான் ஆரம்பிக்க இருக்கிறார்களாம். ஒரு மாதத்தில் 15 நாள்கள் மணிரத்தினத்திற்கும் 10 நாள்கள் எச்.வினோத்திற்கும் என ஒவ்வொரு மாதமும் பிரித்துக் கொடுத்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடிக்க இருக்கிறாராம் கமல்.

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் முடிய இருப்பதால் ஓரளவு கமல் ஃபிரீ ஆகிவிடுவார் என்ற காரணத்தால் படத்தில் இனிமேல் கவனம் செலுத்துவார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: உழைப்பாளர் தினத்தில் பிறந்தவர் இதை தடுக்கலயே!… விடாமுயற்சி படத்துக்கு வந்த திடீர் சிக்கல்!…

Next Story