Categories: Cinema History Cinema News latest news

அந்த படத்தை காட்டி என்னை மிரட்டினாங்க!.. மேடையிலேயே சொன்ன பாக்கியராஜ்.. கமல் கொடுத்த பதிலடி…

தமிழ் சினிமாவில் நேர்த்தியான திரைக்கதைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாக்கியராஜ். துவக்கம் முதலே இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இவரே இயக்கி, இவரே ஹீரோவாக நடித்தார். அப்படி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக பாக்கியராஜுக்கு பெரிய பெண் ரசிகைகள் கூட்டம் இருந்தது.

80களில் மேட்டனி ஷோ என சொல்லப்படும் மதிய காட்சிக்கு பெண்கள் தேர்தெடுப்பது பாக்கியராஜின் படங்கள்தான். இவரின் படங்கள் வெளியான வரை மேட்டனி ஷோ-வுக்கும் தியேட்டரில் கூட்டம் இருந்தது. டார்லிங் டார்லிங் டார்லிங், அந்த ஏழு நாட்கள், தாவணி கனவுகள், தூரல் நின்னு போச்சி, முந்தானை முடிச்சி, எங்க சின்ன ராசா, ராசுக்குட்டி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என அடித்து ஆடியவர்.

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் பாக்கியராஜ்தான் காரணம்; அவர்தான் எங்களுக்கு தலைவலி – புலம்பும் மோகன்ராஜா

ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சியை உருவாக்கி அதில் ஹுயூமர் மற்றும் செண்டிமெண்ட் கலந்து திரைக்கதை அமைப்பது பாக்கியராஜின் ஸ்டைல். அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவரை திரைக்கதை மன்னன் எனவும் திரையுலகில் அழைத்தார்கள். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் இவர் படங்களை இயக்கியிருக்கிறார்.

பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு திரைக்கதையில் உதவியவர் இவர். கடந்த பல வருடங்களாக சினிமாவில் ஆக்டிவாக இவர் இல்லை. எந்த படங்களையும் இயக்குவதும் இல்லை. அவ்வப்போது நடித்து மட்டும் வருகிறார். ஆனால், ஊடகங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: ரஜினி நடிக்க வேண்டிய கதையில் நடித்த பாக்கியராஜ்!. கடைசி நேரத்தில் எல்லாமே மாறிப்போச்சி!..

ஏவிஎம் தயாரிப்பில் பாக்கியராஜ் இயக்கி நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சி. 1983ம் வருடம் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில்தான் நடிகை ஊர்வசி அறிமுகமானார். இந்த படம் பாக்கியராஜுக்கு ஒரு வெள்ளி விழா படமாக அமைந்தது. இந்த படத்திற்கு முன் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான தூங்காதே தம்பி தூங்காதே படம் சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

முந்தானை முடிச்சி வெற்றி விழாவில் பேசிய பாக்கியராஜ் ‘இந்த படத்தை நான் இயக்கி கொண்டிருந்த போது ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை காட்டி என்னை பயமுறுத்தி கொண்டே இருந்தார்கள். அந்த படம் சூப்பர் ஹிட். நீங்கள் தோல்வி படத்தை கொடுக்க கூடாது என சொன்னார்கள்’ என பேசினார். இதை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் ‘தூங்காதே தம்பி தூங்காதே படத்தை காட்டி பயமுறுத்தியதாக பாக்கியராஜ் சொன்னார். இப்போது ‘முந்தானை முடிச்சி படத்தை காட்டி என்னை பயமுறுத்துவார்கள்’ என பேசினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை பார்க்க விடாமல் துரத்தப்பட்ட பாக்கியராஜ்!.. தடுத்தது யார் என்று தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க!..

Published by
சிவா