Cinema News
ரஜினிக்காக உதவி செய்யப் போய் மாட்டிக் கொண்ட கமல்! பட ரிலீஸ் சமயத்தில் நடந்த சோகம்
ரஜினி, கமல் என இரு அசைக்க முடியாத ஜாம்பவான்கள் இருக்கும் இந்த தமிழ் சினிமாவில் இவர்களின் இடத்தை பிடிக்க போகும் அந்த இரு நடிகர்கள் யார் என்ற போட்டியே சமீப காலமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க பல நடிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் ஜெயிலர் படத்தில் ரிலீஸ் ஆன பாடல் மூலம் ரஜினி வெளிக்காட்டி இருக்கிறார். இன்றைய சூழலில் இரு நடிகர்களுக்கு இடையே இருக்கும் போட்டி 50, 60, 80களில் அந்த அளவிற்கு இல்லாமல் தான் இருந்தது. எம்ஜிஆர் சிவாஜி இவர்களுக்கு இடையே போட்டிகள் இருந்தாலும் அதை அவர்களுடைய ரசிகர்களும் அந்த அளவிற்கு வெளிக்காட்டவில்லை. அதேபோல ரஜினி கமல் ரசிகர்களும் மிகவும் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.
இதையும் படிங்க : அரசியல் புரிதல் இல்லாம தப்பா படம் எடுத்துட்டேன்- வருந்திய மாவீரன் இயக்குநர்
அதற்கேற்றார் போல ரஜினி கமல் இருவரும் அந்த காலகட்டத்தில் ஒருவர் ஒருவர் விட்டுக் கொடுத்தும் நட்பாகவும் இருந்து வந்தார்கள். அதற்கு உதாரணமாக தான் ஒரு சம்பவத்தை பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் கூறியிருக்கிறார். ரஜினி நடிப்பில் 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் முள்ளும் மலரும். அந்தப் படத்தின் கதையை மகேந்திரன் எழுத அவரே இயக்கவும் செய்தார். அதற்கு ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திரா பணியாற்றினார்.
ரஜினிக்கு ஜோடியாக ஜெயலட்சுமி மற்றும் சோபா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் பட ரிலீஸ் சமயத்தில் மிகவும் பிரச்சினையை எதிர்கொண்டதாம். ஆனால் இந்தப் படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டுவர வேண்டும் என முக்கியமாக பாடுபட்டவர் நடிகர் கமல் என காந்தராஜ் கூறினார்.
இதையும் படிங்க : எஸ்.எஸ்.ஆர் நடித்தப் படம்! மீண்டும் ஜெமினியை வச்சு எடுத்த இயக்குனர்? – கடைசியில் என்னாச்சு தெரியுமா?
ஒரு கட்டத்தில் அவரே பொருள் உதவியும் செய்து படத்தை ரிலீஸ் செய்வதற்கு காரணமாக இருந்தாராம். ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு மகேந்திரனும் பாலு மகேந்திராவும் சேர்ந்து கமலை ஒரு வழி செய்து விட்டார்களாம். எந்த அளவுக்கு முள்ளும் மலரும் படத்திற்காக ரஜினியையும் இளையராஜாவையும் ஜெயலட்சுமி சோபா ஆகியோரையும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்களோ அந்த அளவிற்கு கமலுக்கும் பாலு மகேந்திரா மகேந்திரா இவர்களுக்கு இடையே இருந்த பிரச்சனையும் பெருமளவு பேசப்பட்டதாம். கமலை இருவரும் சேர்ந்து எந்த அளவுக்கு கழுத்தை அறுக்க முடியுமோ அந்த அளவுக்கு கழுத்தறுத்து விட்டார்களாம். ஆனால் அது என்ன பிரச்சனை என காந்தராஜ் கூறவில்லை.