Actor Kamalhasan: குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான கமல் முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருதை வென்றார். அந்த படத்திற்கு பிறகு எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என மூவேந்தர்கள் நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அப்பவே அவர்களின் நன்மதிப்பை பெற்றவர் கமல். அவர்கள் மூவரும் தூக்கி வளர்த்த குழந்தை கமல் என்று சொல்லலாம்.
கடைசியில் சிவாஜியுடன் தேவர் மகன், ஜெமினியுடன் அவ்வை சண்முகி என அவர்களுக்கு ஈடுகொடுத்து நடித்தார். ரஜினி கூட ஒவ்வொரு மேடையிலும் சொல்வது ‘கலைத்தாய் என்னை மட்டும் கையில் பிடித்துக் கொண்டார். ஆனால் கமலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டார்’ என்று கூறுவார். அந்தளவுக்கு கலையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் கமல்.
இதையும் படிங்க: மகள் கல்யாணத்தை வச்சு காசு பார்த்த ரோபோ சங்கர்!.. இப்ப இதுதான் டிரெண்டு போல!…
சினிமா மட்டுமே தனக்கு சொந்தம் என்ற வகையில்தான் இதுவரை கமல் இருந்திருக்கிறார். சினிமாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். இன்று பல நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் கமல் படங்கள் அவர்களுக்கு பாடங்களாகவும் இருக்கின்றன. எப்படி சிவாஜியை நடிப்பிற்கு இலக்கணம் என்று சொல்கிறோமோ அதே போல் சிவாஜிக்கு அடுத்த படியாக அந்த இடத்தில் கமலைத்தான் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கமலை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் அதாவது சமீபகாலமாக லிங்குசாமி கூறிய சில விஷயங்கள் கமலை பற்றி தவறான ஒரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பிரபல தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் சமீபத்தில் கமலை பற்றி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: குருநாதருக்காக ரஜினிகாந்த் செய்த விஷயம்… பழசை மறக்காம இருக்கதால தான் அவர் சூப்பர்ஸ்டார்..
பி.எல்.தேனப்பன் ஆரம்பத்தில் ப்ரடக்ஷன் மேனேஜராக இருந்தாராம். அவரின் வேலையை பார்த்த கமல் அவரை தயாரிப்பாளராக்கியிருக்கிறார். அதுவும் காதலா காதலா திரைப்படம் தயாராகும் போது தேனப்பனிடம் பணம் இல்லையாம். இருந்தாலும் கமல் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து தேனப்பனின் தயாரிப்பு நிறுவனத்தையும் டைட்டில் கார்டில் போட்டு தயாரிப்பாளராக்கினாராம் கமல்..
அந்தப் படத்தில் அமைந்த காசு மேல காசு வந்து என்பதை போல் எனக்கும் பணம் வந்து கொட்டுச்சு. அதிலிருந்தே கமலை நான் கடவுளாகவே பார்க்கிறேன் என தேனப்பன் கூறினார்.கடைசியில் அந்தப் படத்தின் லாபத்தில் கமலும் தேனப்பனும் பகிர்ந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!..
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…