சஸ்பென்ஸை உடைத்த விக்ரம் படக்குழு...! கமலோடு டூயட் பாடும் 27 வயது இளம் நடிகை...!

by Rohini |   ( Updated:2022-05-04 14:57:43  )
kamal_main_cine
X

கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம்தான் விக்ரம். இந்த படத்தை கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் தான் தயாரிக்கிறது. மேலும் உதய நிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறது.

kamal1_cine

இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு நாளும் படக்குழுவினர் வெளிட்டுவருகின்றனர். நீண்ட நாள்களுக்கு பிறகு கமல் இந்த படத்தில் நடிப்பதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அண்மையில் வெளிவந்த தகவலின் படி இந்த படத்தில் 80களில் வந்த விக்ரம் படத்தில் நடித்த கமல் மாதிரியான தோற்றத்தை அப்படியே இந்த படத்திலும் நம் கண்முன்னே நிறுத்த திட்டமிட்டுள்ளனராம்.

kamal2_cine

அதற்காக ஹாலிவுட் ரேஞ்சுக்கு அங்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனராம் படக்குழு. அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 80களில் இருந்த கமல் மாதிரியான தோற்றத்தை கொண்டு வந்துள்ளனராம். இந்த தோற்றத்தில் வரும் இவரின் ஒரு சில நிமிட காட்சிகள் கண்டிப்பாக மக்களுக்கு ரசிக்கும் படியாக இருக்கும் என கருதுகின்றனர்.

kamal3_cine

மேலும் இதுவரைக்கும் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது.அதையும் உடைத்து விட்டது படக்குழு. கன்னட பட நடிகையான 27 வயதே ஆன ஷாவ்மி ஸ்ரீவஸ்தாவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த திரைப்பிரபலங்களில் சிலர் 67 வயதான கமலுக்கு 27 வயதான நடிகை ஜோடியாக நடிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை கமல் 80களில் தோன்றும் அந்த கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பிற்கும் என சில பேர் கருதுகின்றனர்.

Next Story