கமலுக்கு கூட்டணி ஒன்றே பலம்...! அந்த வகையில் ஹிட் ஆன ஆண்டவரின் படங்கள்..!
80 களில் தமிழ் சினிமாவில் மாபெரும் ஜாம்பவான்களாக திகழ்ந்தவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். சினிமாவில் ரஜினிக்கு முன்னாடியே கமல் காலடி எடுத்து வைத்தவர். ரஜினி வந்த பிறகு தான் கமலுக்கு போட்டியானார் ரஜினி.
இருவரின் படங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக மாறியது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கமல் தான் தேர்ந்தெடுக்கும் படங்களினால் அவரின் மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார். ஆனால் ரஜினி தன்னுடைய ஸ்டைலினால் இன்றளவும் மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார்.
மேலும் அரசியல், டிவி ஷோக்கள் மூலம் பிஸியான கமல் சினிமாவில் முன்பு இருந்த அந்த இடத்தை பெற முடியாமல் தவித்தார். மேலும் விஜய் , அஜித் போன்றோரின் வருகையாலும் இவரின் இடமே காலியான மாதிரி தோன்றி விட்டது.
இந்த நிலையில் தான் அந்த நேரங்களில் யாரெல்லாம் மார்க்கெட்டோடு இருக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கமல். அந்த வகையில் பிரபுதேவாவுடன் ‘காதலா காதலா’, அப்பாஸுடன் ‘ பம்மல் கே சம்பந்தம்’, மாதவனுடன் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்களும் ஹிட் ஆனது. அதே பாணியை தான் இப்பொழுதும் கையில் எடுத்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்ரம் படத்தில் நடித்ததன் மூலம் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் நம்ம ஆண்டவர்.