மஞ்சுமல் பாய்ஸ் இருக்கட்டும்... குணாவே காப்பிதான்!.. கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.

by sankaran v |
Guna
X

Guna

கமல் நடிப்பில் மிரட்டிய படம் குணா. இந்தப் படம் வந்தபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லாவிட்டாலும் காலம் கடந்தும் பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நடிப்பு தான். தற்போது மலையாளத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் படம் இந்தப் படத்தின் தழுவல் தான். அதே நேரம் குணாவே காப்பிதான் என்றும் சொல்லப்படுகிறது.

பிரபல பத்திரிகையாளர் டி.எஸ்.கிருஷ்ணவேல் கமல் படமே காப்பி தான் என கைமேல் அடித்து சத்தியம் செய்யாத குறையாக ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார். என்ன சொல்கிறார் என பார்க்கலாமா...

கமல் படம் குணா. இது ஒரு கல்ட் கிளாசிக் மூவி. டைம் மி அப் டைம் மி டவுன் என்ற ஹாலிவுட் படம் 1989ல் வெளியானது. பெட்ரோ ஆல்மோட்வார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரிக்கி என்ற கேரக்டரில் ஆன்டோனியா பென்டிராஸ் என்பவர் நடித்துள்ளார். இவர் ஒரு மனநோயாளி. இவர் என்னவெல்லாம் செய்கிறாரோ அதை அடிப்படையாக வைத்துத் தான் குணா படத்திலும் கமலின் கேரக்டர் வருகிறதாம்.

Guna copy

Guna copy

படத்தின் ஆரம்பக் காட்சியில் கமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றிப் பேசும் நீண்ட வசனம் போலவே ஹாலிவுட் படத்திலும் ரிக்கி கேரக்டர் பேசுகிறதாம். ஆனால் படத்திற்கான உரிமை எதுவும் வாங்கவில்லையாம். அதற்குப் பதிலாக கொஞ்சம் காட்சிகளை சேஞ்ச் பண்ணி விட்டாராம். இந்த மூஞ்சி பிடிக்கல... எனக்கு வேணாம். இது அசிங்கம். இது எங்க அப்பா மூஞ்சி. என் மேல ஒட்ட வச்சிட்டாங்க. இது வேணாம் வேணாம்னு சொல்லுவார் கமல்.

அது போல அபிராமியே தாலாட்டும் சாமியே என்று மலைக்கிராமத்தில் கமல் பாடுவது என பல காட்சிகள் அந்தப்படத்தோடு ஒட்டுகிறதாம். ஒருமுறை கமலிடம் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம். 'நீங்க ஆங்கிலப்படங்களைப் பார்த்து இன்ஸ்பயர் பண்ணிருக்கீங்களே' என கேட்கப்பட்டதாம்.

அதற்கு கமல் 'நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஒரு புத்தகத்தை எடுத்து ஜோக் படிக்கிறோம். அது நல்லாருந்தா இன்னொருத்தர்கிட்ட சொல்றது இல்லையா என பதில் சொன்னாராம்.' காப்பி அடிச்சிட்டு அதை ஜஸ்டிபை பண்ணக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story