Connect with us

நாங்கல்லாம் அப்பவே அப்படி.! 34 வருஷத்துக்கு முன்பே கமலின் விக்ரம் செய்த ஆச்சர்யங்களின் தொகுப்பு..,

Cinema History

நாங்கல்லாம் அப்பவே அப்படி.! 34 வருஷத்துக்கு முன்பே கமலின் விக்ரம் செய்த ஆச்சர்யங்களின் தொகுப்பு..,

1986ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படமானது அந்த சமயம் தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுதிய கதையிலிருந்து எடுக்கப்பட்டு அதனை திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களை செய்து இருந்தார் கமல்ஹாசன்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தமிழ் சினிமா வளரவில்லை என்று கூறிய காலத்தில்,விக்ரம் வெளியாகி இருந்தது.  உண்மையில் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக விக்ரம் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த சமயம் இந்த திரைப்படம் ரசிகர்களால் பெரிய வெற்றி பெறவில்லை.

அந்த சமயம் கமர்சியல் படங்கள் அதிகமாக வந்ததன் காரணமாக,  ராக்கெட், ராக்கெட்டை கடத்துவது, அதனை வெடிக்கச் செய்யாமல் இருக்க கம்ப்யூட்டர் உபயோகப்படுத்தி கோடிங் எழுதுவது என்பது  அப்போதைய ரசிகர்களுக்கு சரியாக போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய வெற்றியை பெறவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

இருந்தாலும் கமலின் புது புது முயற்சிகளால் தற்போதும் இந்த இத்திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவே கமல் விரும்பும் மிகப்பெரிய வெற்றி. எத்தனை வருடங்கள் ஆனாலும் தனது திரைப்படங்கள் மக்களிடம்  பேசப்பட வேண்டும் என்பதே அவரின் குறிக்கோள். அதை செவ்வனே செய்து இருப்பார் இந்த விக்ரம் படத்திலும்.

இந்த திரைப்படத்தில் சலமியா எனும் ஒரு நாடு இருப்பதாக கூறப்பட்டு இருக்கும். ஆனால் உண்மையில் அப்படி ஒரு நாடு உலகத்தில் கிடையாது. அந்த சலமியா நாடு இருப்பதாக கட்டப்பட்ட இடம் ராஜஸ்தான் மாநிலம். விக்ரம் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் அங்குதான் நடைபெற்றது.

அதேபோல இந்த திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முறையாக கம்ப்யூட்டர் முறையில் இசையமைப்புகளை செய்திருந்தார். அதன் காரணமாகவே இந்த திரைப்படத்தின் பாடல்கள் தற்போதும் தனித்துவமாக இருக்கும். முதல் பாடலான விக்ரம் எனும் பாடல், வனிதாமணி பாடல். என் ஜோடி மஞ்ச குருவி எனும் பாடல் என அனைத்தும் தற்போதும் ரசிகர்களின் பேவரைட்.

இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக கம்ப்யூட்டர் என்று ஒன்று இருப்பதை தமிழ் திரையுலகிற்கு கமல்ஹாசன் காட்டினார். அதன்மூலம் கோடிங் எழுதுவது அந்த கோடிங் மூலம் ராக்கெட் வெடிக்க வைக்காமல் இருப்பது போன்ற அறிவியல் யுக்திகளை பயன்படுத்தினார்.

இதையும் படியுங்களேன் – உடல் எடையை குறைக்க வேண்டாத வேலை.! இளம் நடிகை திடீர் மரணம்.! பேரதிர்ச்சியில் திரையுலகம்..,

இந்த திரைப்படத்தில் நடித்திருந்த கமல்ஹாசனை பற்றி எப்படி பாராட்டி பேச வேண்டுமோ கிட்டத்தட்ட அதற்கு நிகராக அதில் வில்லனாகவே வாழ்ந்திருந்த சத்யராஜை பற்றியும் பேச வேண்டும். அந்த சமயம் சத்யராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் தேடப்பட்டு வந்த வில்லன். அவர் வில்லன் ரோலில் காட்டும் குணாதிசயம், மேனரிசம் என்பவை ரசிகர்களை, வில்லனையும் ரசிக்கலாம் என்று எண்ண வைத்தது அந்த அளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விட்டார் சுகிர்தராஜாவாக நடித்திருந்த சத்யராஜ்.

34 வருடம் கழித்தும் இன்னும் விக்ரம் படத்தில் உள்ள ஆச்சரியங்களை நாம் பேசி வருகின்றோம். இதுவே உலக நாயகன் கமலஹாசனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தற்போது அதே விக்ரம் பெயரில் அவரது சிஷ்யர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ஜூன் மூன்றாம் தேதி பிரமாண்டமாக ரிலீசாக உள்ளது. அதனை எதிர் நோக்கி கமல் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top