கல்கி படத்தில் தனி முத்திரை பதிக்கப் போகும் கமல்!.. இதற்குதானா இந்த விஷப்பரீட்சை!

Kalki 2898 AD
கமல் இதுவரை வேறு மொழிகளில் நேரடி வில்லன் அவதாரம் எடுத்ததில்லை. முதல் முறையாக கல்கி 2898 AD படத்தில் இந்தப் புதிய அவதாரத்தை எடுக்க உள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ்த்திரை உலகமும், பாலிவுட்டும் கூட ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது.
இந்தப் படத்தைப் பற்றி மூத்த தயாரிப்பாளர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். கமல் தனது திரையுலக வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக்காட்டியுள்ளார். அவர் தற்போது தெலுங்கு திரையுலக ரசிகர்களை தனது வில்லன் கேரக்டர் மூலம் ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க...இதுக்கு தான் இளையராஜா பயோபிக் பங்ஷனில் கமல்ஹாசன் கலந்துகொண்டாரா?
இதற்கு முன்பு கமல் தசாவதாரம் படத்தில் முன்னாள் சிஐஏ ஏஜென்டாக நடித்துள்ளார். இப்போதும் அதே கேரக்டரில் தான் கல்கியில் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தில் பாகுபலியில் ஹீரோவாக கலக்கிய பிரபாஸ் தான் நடிப்பதால் அவருக்கு வில்லனாக என்றால் எவ்வளவு கெத்தைக் காட்ட வேண்டுமோ அதற்கு கொஞ்சமும் சளைக்காதவராக கமல் நடித்துள்ளாராம். அதனால் மோதல்கள் பலமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. படம் ஒரு சயின்ஸ் திரில்லர் என்பதாலும் 2கே கிட்ஸ்களின் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Indurudu Chandrudu
இதற்கு முன் தெலுங்கில் கமல் இந்துருடு சந்துருடு என்ற படத்தில் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து கலக்கினார். அதில் ஒன்று ஊழலில் திளைத்த மேயராக வித்தியாசமான மேக்அப், தொப்பை என அசத்தினார். கடைசியில் தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்துவார். தமிழில் இது இந்திரன் சந்திரன் என்ற பெயரில் வெளியானது.
கமல் தெலுங்கில் நடித்த சொம்மு ஒக்கடி சொக்கு ஒக்கடி, சாகர சங்கமம், சுவாதி முத்யம் போன்ற படங்கள் அங்குள்ள ரசிகர்களைக் கொண்டாட வைத்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் இந்தப் படத்தில் பிரபாஸ்சும், கமலும் இணைந்து நடித்து இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் விருந்தாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.