
Cinema History
இதோ இதோ…தெரியுது…! துடிக்குது புஜம்….ஜெயிப்பது நிஜம்…! 10 கோடி ரூபாயில் கமலின் மிரட்டலான புதிய தொழில்நுட்பம்!
விக்ரம் படம் மிகவும் பரபரப்பாக வந்து மெருகேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரம்பிக்கலாங்களா…என்ற கமலின் டயலாக் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப்படம் கமலுடைய ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையப் போகிறது. ஜூன் 3ல் கமல் ரசிகர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் கிடைக்கப்போகும் படையலாகத் தான் பார்க்கவேண்டியுள்ளது. படத்திலும் இந்தப்படையல் காட்சி வருகிறது.
கோழிக்கறி, மட்டன் என்று படையல் விருந்து தலைவாழை இலை போட்டு அசர வைத்து விடுகிறது இந்த விருந்து. படத்தில் கமலின் இளமையான தோற்றத்தை தொழில்நுட்பத்தில் கொண்டு வந்துள்ளார்கள் என்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

vikram 1986
அது 1986ல் வெளியான விக்ரம் படத்தில் வரும் கமலின் தோற்றம் தான். இந்தக்காட்சி ப்ளாஷ்பேக் காட்சியாக படத்தில் வருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக இணையதளத்தில் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. இதில் படப்பிடிப்பின் போது குழுவினர் எடுத்த ஒரு செல்பி ஒன்று உள்ளது.
இந்தப் போட்டோவின் ஓரத்தில் லேப்டாப் ஒன்றில் கமலின் விக்ரம் படத்தின் இளமையான தோற்றம் உள்ளது. இதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தப்படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். மாஸ்டர் படத்தில் விஜயை அலறவிட்ட வில்லனாக வந்த விஜய் சேதுபதி விக்ரம் படத்தில் சூழகருப்பனாக வந்து கமலுடன் நேருக்கு நேர் மோதுகிறார்.

kamal 1986
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் இந்தப்படத்தில் வெறித்தனம் தான். மலையாள நடிகர் பகத்பாசில் அரசியல்வாதியாக வந்து மிரட்டுகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு கமல் இந்தப்படத்தில் ஆக்ரோஷமாக சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தில் இளமைத் தோற்றத்தில் கமல் புதிய தொழில்நுட்பத்தில் தோன்றுவது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

vikram kamal
இந்தப் புதிய தொழில்நுட்பத்திற்கு 10 கோடி ரூபாய் வரை உலகநாயகன் செலவழித்துள்ளாராம். இந்தத் தொழில்நுட்பம் இதற்கு முன்பாக எக்ஸ்மென் என்ற ஹாலிவுட் படத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்ரம் படம் தான் தமிழுக்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வரும் படங்களிலும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
நம்மவர் கமல் இளமைத் தோற்றத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் அதிரடியான சண்டைக்காட்சிகளில் வலம் வருவார் என்றும் கூறப்படுகிறது. வர உள்ள விக்ரம் வேற லெவல் வெற்றியைப் பெறும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.