அந்த விஷயத்தில் ரஜினி, விஜயை விட கமலுக்கே முதலிடம் கொடுத்த பிரபலம்...! ஏன்னு தெரியுமா?

தமிழ்த்திரை உலகம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஒரு வெற்றியைக் கூட கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. பிரம்மாண்டமான படங்களும் எதுவும் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் எல்லாமே பெரிய நடிகர்களின் படங்கள். பிரம்மாண்டமாகத் தயாராகி வருவதால் சற்று காலதாமதம் ஆகிறது. அந்த வகையில் இந்தியன் 2, வேட்டையன், கோட், தக் லைஷப், விடாமுயற்சி, கங்குவா, தங்கலான், ராயன் என இந்த ஆண்டு வெளியாகுவதற்கு விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன.

இந்தப் படங்களின் தாமதத்தால் தான் வெற்றியும் தாமதமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ்சினிமா உலகம் ரொம்பவே ஸ்தம்பித்து விட்டது. சமீபத்தில் வெளியான சாமானியன், பிடி சார் படங்களும் எதிர்பார்த்த அளவு பெரிய வரவேற்பு இல்லை. இவற்றில் சாமானியன் படத்தை ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ளதால் ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையும் படிங்க... சூப்பர்ஸ்டார்கள்… கடைசியில் மாஸ் வில்லன்… அசால்ட்டாக மாநாடு படத்தினை தட்டி தூக்கிய எஸ்.ஜே.சூர்யா…

அஜீத், விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்குத் தயாராவார்கள். அவர்களது படங்கள் இதுவரை வரவில்லை. அதனால் தான் வெற்றிக்கனியை மற்ற நடிகர்களால் பறிக்க முடியவில்லை.

அதே நேரம் தமிழ்த்திரை உலகம் இதுவரை வசூலில் போட்டி போட்டு வருகிறது என்றால் முக்கியமாக ரஜினி, கமல், விஜய் படங்களுக்குள் தான் இந்த மோதல்கள் வருகின்றன. ரஜினி படம் வசூலை விட விஜய் படம் வசூலில் முந்தி விடுகிறது. இல்லா விட்டால் கமல் படம் அந்த வெற்றிக்கனியை தட்டி விடுகிறது. ஆனாலும் 1000 கோடி வசூலை இதுவரை எந்தப் படமும் தொடவில்லை. அதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

Indian 2

Indian 2

தற்போது அந்தப் போட்டியில் ரஜினி, கமல், விஜய் படங்கள் களம் காண உள்ளன. கமலுக்கு இந்தியன் 2 படமும், விஜய்க்கு கோட் படமும், ரஜினிக்கு வேட்டையன் படமும், அடுத்தடுத்து வெளியாகின்றன. அந்த வகையில் வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணனிடம் இந்தியன் 2, வேட்டையன், கோட் இந்த 3 படங்களில் எந்தப் படம் முதன் முதலில் 1000 கோடி வசூலை ஈட்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு பதிலளித்த அவர், முதன் முதலில் கமல் நடித்த இந்தியன் 2 வருவதால் அந்தப் படத்திற்குத் தான் 1000 கோடி வசூலைத் தொடும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story